பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச்சங்க காலம் 193 எனத் தொடங்கும் பாடல் ஐங்குறு நூறு - வாழ்த்துப்பாடல் ஆகும்; அடுத்து, கூத்தராற்றுப்படை எனப்பட்டிருப்பது, பத் துப்பாட்டுள் ஒன்றாகிய மலைபடு கடாம் ஆகும். மலைபடு கடாம் அல்லாத வேறு கூத்தராற்றுப்படை இது. எனக்கூறலா கதோ எனில், நச்சினார்க்கினியர், கூத்தராற்றுப் படையைத் தொடர்ந்து, பத்துப்பாட்டைச் சேர்ந்த மதுரைக் காஞ்சியையும் பட்டினப் பாலையையும் சேர்த்துக்கொண்டு, இவை (மூன்றும்) ஒழிந்த 'பாட்டுஏழும் எனப் பத்துப்பாட்டில் உள்ள மற்ற ஏழு பாட்டுகளைக் குறிப்பிட்டுள்ளா ராதலின், இந்தக் கூத்தராற்றுப் படை என்பது மலைபடுகடாமேயாகும். இதுகாறும், பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் உள்ள பத்துப் பாட்டுக்களைப் பற்றிய விவரம் சுருக்கமாகத் தரப் பிட்டது. ஒவ்வொரு பாட்டும் ஒரு தொகை நூல் இல்லை யெனினும், பத்துப் பாட்டுக்களும் சேர்ந்த திரட்டு உருவம் ஒரு தொகையாக மதிக்கப்படுகிறது. பத்துவகை மலர்களின் தொகுப்பாகிய ஒரு மாலை போன்றது இஃது என்னும் கருத்தை, நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரச் செய்யு வரில் உள்ள, 'ஆன்றோர் புகழ்ந்த அறிவினில் தெரிந்து சான்றோர் உரைத்த தண்தமிழ்த் தெரியல் ஒருபது பாட்டும் உணர்பவர்க் கெல்லாம்...” என்னும் பகுதியால் அறியலாம். பத்துப் பாட்டை ஒரு 'தமிழ்த் தெரியல் என்று சொல்லுகிறது இந்தச் செய்யுள். தமிழ்த் தெரியல் என்றால் தமிழ் மாலை என்று பொருளாம். பலர் எழுதிய தொகுப்பாதலின் இதனைப் பன்மலர் மாலைத் திரள்'எனலாம். தொகுத்தவரும் காலமும்: கடைச் சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட இந்தப் பத்துப் பாடல்களையும், 'பத்துப்பாட்டு என்னும் பெயரில் தொகுத்தவர் யார்? தொகுத்த காலம் எது? இந்த வினாக் கட்கு நச்சினார்க்கினியர் விடை பகர்ந்துள்ளார். தொகுத் துள்ளவர்கள் சங்கப் புலவர்களே; எனவே, தொகுக்கப்பட்ட காலம் கடைச்சங்க காலம் என்பதும் தெளிவு. இதனை,