பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


195 கடைச்சங்க காலம் ஆற்றுப் படுத்தும் அரிய பண்பு: இந்தப் பத்துப் பாட்டைத் தொகுத்தது எதற்காக? இதனால் மக்கள் இனத்திற்கு யாது பயன்? ஒரு பயனும் இன்றேல், இதனைத் தொகுத்துப் போற்றிக் காத்தது பொருளற்ற செயலாய்ப் போய்விடுமே! ஆம், இதற்கு விடை இதோ, வருகிறது: ஒருவர், தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறும்படி ஆற்றுப்படுத்தும் (வழிவகை செய்யும்) அரிய பெரிய பண் பாட்டிற்கு ஆற்றுப்படை' என்னும் அழகிய பெயர் தமிழ் நூல்களில் வழங்கப்பட்டிருப்பதை மேலே கண்டோம். “தம்மினும் மேலாக, அல்ல - தமக்கு நிகராகவும் பிறர் வந்தவிடக்கூடாது' என்று எண்ணும் மக்கள் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இருக்கும்போது, - தாம் பெற்ற தன்மையைப் பிறர் அறியக்கூடாது - பிறர் பெறக்கூடாது என்று மறைக்கும் மக்கள் பலர் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இருக்கும்போது, - தாம் தீமையடைந்துவிடின் அந்தத் தீமையைப் பிறரும் பெறவேண்டும் - பெறச் செய்ய வேண்டும் எனச் சூழ்ந்து அதற்கென முயலும் கீழ் மக்கள் மிகப் பலர் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இருக்கும் போது, இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஆற்றுப்படை’ செய்யும் அரிய பண்பாடு தமிழ் மக்களிடையே இருந்ததெனில், அதனை எந்தச் சொற்களால் பாராட்டுவது! பத்துப் பாட்டுள் பாதி - அதாவது-ஐந்து நூல்கள் ஆற்றுப் படைகளாக இருப்பதை நாம் அறிந்துள்ளோம். ஆற்றுப் படுத் தும் அரிய பண்பாட்டை அடித்தளமாகக் கொண்டு, இரண்டா பிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் முழு நூல்கள் பல தோன்றி யிருப்பதைக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டின் உய்ர் எல்லையை உணரலாம். இலக்கியம் எனப்படுவது, தான் தோன்றிய இடத்தில் - தான் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்களின் மனப் பண்பை எடுத்துக் காட்டும் ஒருவகைக் கண்ணாடி யாகும், இதற்குச் சான்றாக, ஆற்றுப் படைகளைக் கொண்ட பத்துப்