பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


XX யான பொருள்களும் இருக்கும். ஒரே இடத்தில்-குறுகிய நேரத்தில் பல்வேறு வகைப் பொருள்களையும் வாங்கிவிடலாம். இந்த 'அமுத சுரபி போன்றதுதான் கலைக்களஞ்சியம்’ என்பது. கலைகள்: தமிழ், மற்ற உலக மொழிகள், இலக்கிய-இலக்கணம், புலவர்கள், உயிரியல், மர (தாவர) இயல், விலங்கியல், நில வியல், காட்டியல், மெய்ப்பொருள் (தத்துவ) இயல், சமயம் (மதம்), உளவியல், அறவியல், அளவையியல், நாடகம், இசை, நடனம், மாந்தர் (மானிட இயல், தொல் பொருள் இயல், வரலாறு, அரசியல், பொருளியல், இயற்பியல், வேதியியல், @uff on 5 goaoudi (Natural Science), - ஒவியம், சிற்பம், கட்டடக் கலை, மொழியியல், பொறியியல், தொழில் நுட்ப இயல், போரியல், சுரங்க இயல், சட்ட இயல், மருத்துவம் உணவியல், உடலியல், உடல் நல இயல், கால் நடை மருத்து வம், கணிதம், வான இயல், புள்ளி இயல், வேளாண்மை, கல்வியியல், பல்வேறு மாந்தரின் வாழ்க்கை வரலாறு-முதலிய பொருள்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில், அந்தந்த இயல் தொடர்பான-துறை தொடர்பான நூல்களைத் தனித் தனியே தேடிப் பெற்றுப் படிக்கவேண்டும்-அந்தந்தத் துறை வல்லாரிடம் கேட்டும் பழகியும் தெரிந்து கொள்ள வேண்டும். - - - இந்தக் காலத்திற்கு ஏற்ப மேலே பல கலைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. சரசுவதிக்குக் கலைமகள்' என்ற பெயர் உண்டு. அவள், "ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை" என்று போற்றப்பட்டிருக்கிறாள். அந்தக் கால்த்தில் கூறப் பட்டுள்ள அறுபத்து நான்கு கலைகளுள் பெரும்பாலானவை, மேலே வேறு பெயர்களில் கூறப்பட்டும் அடக்கப்பட்டும் உள்ளன. அந்தக்காலத்தில் அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவர்கள் இருந்தனர்.