பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தமிழ் நூல் தொகுப்புக் கலை பாட்டே போதும். எனவே, பத்துப்பட்டின் காலத்தைத் தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனலாம். இந்த ஆற்றுப்படைப் பண்பு, இலக்கண நூலாகிய தொல் காப்பியத்திலேயே பேசப்பட்டுள்ளது. இதனைத் தொல்காப் பியம் - பொருளாதிகாரம் - புறத்திணையியலில் உள்ள, 'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்' என்னும் (36 - ஆம்) நூற்பாப் பகுதியால் அறியலாம் இந்தப் பழம்பெரும் பண்பாட்டிற்கு ஏற்ப இயற்றப்பட்ட ஆற்றுப் படை நூல்கள் அழிந்தொழிந்து போகாமல், என்றென்றும் நின்று நிலைத்து, இந்தப் பண்பாட்டை மக்கள் இனத்திற்குப் பறைசாற்றி அறிவித்துக் கொண்டிருக்கும் வகையில், பத்துப் பாட்டு தொகுக்கப்பெற்றுப் பயனளித்துக் கொண்டிருப்பது பாராட்டத் தக்கதாகும்.