பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டுத் தொகை 199 “உம்மை எதிர்மறை யாகலின், இம் முறையன்றிச் சொல்லவும் படும் என்பது பொருளாயிற்று. அது தொகை களினும் கீழ்த் கணக்குக்களிலும் இம் முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க', எனவும், புறத்திணையியலில் 'அமரர் கண் முடியும் அறு வகையாலும் என்று தொடங்கும்(26-ஆம்) நூற்பாவின் கீழே 'எரியள்ளுவன்ன நிறத்தன்' என்னும் (பதிற்றுப்பத்து) பாடலைக் கடவுள் வாழ்த்துக்கு எடுத்துக்காட்டாகத் தந்து, அதன் கீழே, 'இது கடவுள் வாழ்த்து. தொகைகளிலும் கீழ்க்கணக் கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக் குக' எனவும், நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரைப்பகுதி களும் இதற்குத் தக்க சான்றாகும். இந்த உரையாசிரியர்களின் காலத்திற்கும் பலநூற்றாண்டு கட்கு முன்பே - அதாவது - ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதி யிலேயே இந்த நூல்கள் தொகை' என்னும் பொதுப் பெயரால் சுட்டப்பட்டன என்று கருதுவதற்கு உரிய குறிப்பு ஒன்று திரு ஞான சம்பந்தர் தேவாரத்தில் கிடைத்திருக்கிறது. சம்பந்தர் சமணரை வெல்வதற்காக இயற்றிய வையையாற்றில் இட்ட தாகக் கூறப்படுகின்ற திருப்பாசுரம் என்னும் தேவாரப் பதிகத்தில் உள்ள "அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை ஆககிஞனும் தெற்றென்ற தெய்வங் தெளியார் ஓலை தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர்வி னுரவும் பண்பு நோக்கில் பெற்றொன் றுயர்த்தபெருமான் பெருமானு மன்றே” என்னும் (11) பாடலில் உள்ள, மதுரைத் தொகை ஆக்கி னான்’ என்னும் தொடர் ஈண்டு எண்ணிப் பார்த்தற் குரியது. மதுரையில் தொகை நூல்கள் பல தோன்ற ச் செய்தவன் என்பது இதன் பொருளாய் இருக்கலாம். இந்தப் பாதையிலேயே சேக்கிழாரின் பெரியபுராணமும் செல்லு கிறது. பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தரின் வரலாற்