பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


200 தமிழ் நூல் தொகுப்புக் கலை றைப் பாடிவரும் சேக்கிழார், சம்பந்தரின் திருப்பாசுரப் பதிகத்திலுள்ள ஒவ்வொரு பாடலுக்கும் பாட்டாலேயே பொருள் கூறுகிறார். மேலே காட்டியுள்ள, அற்றன்றி என்று தொடங்கும் சம்பந்தர் பாடலுக்கு உரிய பொருள் விளக்கமாகப் பெரியபுராணத்தில் சேக்கிழார். பாடியுள்ள பாடல் வருமாறு:- -- "ஆன அற்றன்றி' என்ற அத்திருப் பாட்டில் கூடல் மாநக ரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறா ஈனர்கள் எல்லைக் கிட்ட ஏடுநீர் எதிர்தந்து செல்லில் ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்.” இந்தப் பாடலில், 'மதுரைத் தொகை யாக்கினான்’ என்ப தற்கு, மா நகரத்துச் சங்கம் வைத்தவன்' என்று சேக்கிழார் பொருள் கூறியுள்ளார். தொகை' என்பதன் பொருளாகச் 'சங்கம்’ எனச் சேக்கிழார் ஒரு போக்குக் காட்டியிருப்பினும், ஆராய்ச்சி யுள்ளம் தொகை நூல்களை மறப்பதற்கில்லை. தொகை, என்பதற்குச் சங்கம்' எனப் பொருள் கூறுவ தனினும் தொகை நூல்கள் எனப் பொருள் கூறவே தக்க வாய்ப்பு உள்ளது. ஈண்டு, ஆக்கினான்’ என்னும் சொல்லை யும் நோக்க வேண்டும். சங்கம் ஆக்கினான் என்பதனினும் நூல்கள் ஆக்கினான் (உண்டாகச் செய்தான்) என்று பொருள் கூறுதலே மொழிமரபுக்கு ஏற்றதாகும். ஆகக்கூடியும், சேக்கிழார் இங்கே நூல்கள் தோன்றிய சங்கத்தை நினைவு செய்திருப்பது போற்றத்தக்கது. அடுத்து, -எட்டுத் தொகையின் பொதுவான சுருக்க மான இலக்கணத்தை, பன்னிரு பாட்டியலிலிருந்து முன்னர் க் காட்டப்பட்டுள்ள, ‘அகவலும் கலிப்பாவும் பரிபாடலும் பதிற்றைந் தாதி பதிற்றைம்ப தீறா மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக் கெனவும்..." என்னும் நூற்பாப் பகுதியால் அறியலாம். எட்டுத்தொகை நூல்கள் அகவலாலாவது, கலிப்பாவாலாவது, பரிபாடலா லாவது ஆக்கப்பட்டு, ஐம்பது பாடல்களுக்குக் குறையாமலும்,