பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எட்டுத் தொகை 203 எனக் கலியையே முதலில் கூறியுள்ளாரல்லவா? இன்னும் சொல்லப் போனால்,-பரிபாடலைக் கலிப்பாவினுள் அடக்கி விடலாம் என்னும் ஒரு கொள்கையும் உண்டு. இதனைப் பேராசிரியர் (செய்யுளியல்-130)எழுதியுள்ள, 'இனிப் பரிபாடலுங் கலிப்பாவினுள் அடங்கு மென்பாரும் உளர். கலியும் பரிபாடலும் என எட்டுத்தொகையுள் இரண்டு தொகை தம்மின் வேறாதலின், அவ்வாறு கூறுவார் செய்யுள் அறியாதார் என்பது...' என்னும் உரைப்பகுதியாலும், நச்சினார்க்கினியர் (செய்யுளி யல் - 130) எழுதியுள்ள, * 'பரிபாடலுங் கலியாகாவோ வெனின், கலியும் பரிபாட லும் என வேறாக இரண்டு தொகை வழங்குதலானும் உறுப் பின் வேறுபாட்டானும் வேறென்றுணர்க. என்னும் உரைப்பகுதியாலும் அறியலாம். இதனால் கலித் தெகைக்குப் பின்னால் வைக்கப்பட வேண்டியது பரிபாடல் என்பது தெளிவாகப் புலனாகும். இந்த முறையை ஒட்டியே பன்னிரு பாட்டியல் என்னும் நூலும், ‘அகவலும் கலிப்பாவும் பரிபாடலும் பதிற்றைங் தாதி பதிற்ம்றைம்ப தீறா மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக்கு..., எனக் கூறியுள்ளது. எனவே, நற்றிணை நல்ல குறுந்தொகை என்று தொடங்கும் பழைய செய்யுளில் அமைக்கப்பட்டுள்ள நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானு று. என்னும் வரிசைமுறை பொருந்தாது என்பதும், சீர் தளை எதுகை மோனை அமையப் பாடல் இயற்றும் நோக்கத் திற்காக முறை மாறான வரிசையமைப்பு இந்தப்பாடலில் கையாளப்பட்டுள்ளது என்பதும் நன்கு தெளிவாகும். இனி, இறையனார் அகப்பொருள் உரையில், ஆசிரியப்பா வால் ஆன ஆறு தொகை நூல்களும் வரிசைப்படுத்தப் பட் டுள்ள முறையை ஆராயவேண்டும். (1) நெடுந்தொகை