பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/228

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


204 தமிழ் நூல் தொகுப்புக் கலை நானூறு, (2) குறுந்தொகை நானூறு, (3) நற்றிணைநானூறு, (4) புறநானூறு, (5) ஜங்குறுநூறு, (6) பதிற்றுப்பத்து, - என்பது அந்த வரிசை முறை. இந்த ஆறு நூல்களுள் நானூறு பாடல்கள் கொண்டவை நான்கு: ஐந்நூறு பாடல்கள் கொண்டது ஒன்று; நூறு பாடல் கொண்டது ஒன்று. நானுாறு பாடல்கள் கொண்ட நூல்கள் பெரும்பான்மை (Majority) பெற்றிருப்பதால் அவை நான்கும் முதலிலும் சிறிய சிறிய (குறுகிய) ஐந்நூறு பாடல்கள் கொண்ட ஐங்குறு நூறு ஐந்தா வதாகவும், அளவால் மிகவும் குறைந்த நூறு பாடல்கள் கொண்ட சிறிய நூலாகிய பதிற்றுப்பத்து ஆறாவதாகவும் நிரல்செய்யப் பெற்றுள்ளன. நானூறு பாடல்கள் கொண்ட நான்கு நூல்களுள்ளும் நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானுாறு, நற்றிணை நானூறு ஆகிய மூன்றும் அகப்பொருள் பற்றியனவாதலின் அவை முதலிலும், புறநானூறு புறப்பொருள் பற்றியதாதலின் அது இறுதியில்- நான்காவதாகவும் நிறுத்தப் மெற்றுள்ளன. இந்த நான்கனுள் அகம் பற்றியன மூன்றும் புறம் பற்றியது ஒன்றுமாக உள்ள பெரும்பான்மை - சிறுபான்மை என்பது ஒருபுறம் இருக்க, அகம் புறம் என்னும் இரண்டனுள், அகமே தொல் காப்பியம் முதற்கொண்டு எல்லா நூல்களிலும் முதலில் பேசப்பட்டிருப்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. அகப்பொருள் பற்றிய நூல்கள் மூன்றனுள்ளும், அடியள வால் பெரிய பாடல்களையுடைய நெடுந்தொகை முதலாவ தாகவும், அடியளவால் சிறிய பாடல்களையுடைய குறுந் தொகை இரண்டாவதாகவும், இரண்டிற்கும் இடைப் பட்ட அளவுள்ள பாடல்களையுடைய நற்றிணை மூன்றாவதாகவும் அமைக்கப் பெற்றுள்ளன. இடைப்பட்ட அளவுள்ள பாடல் களைக் கொண்ட நற்றிணையை இடையிலே. இரண்டாவதாக அல்லவா அமைக்கவேண்டும்? - என்ற வினா ஈண்டு எழலாம் நெடுந்தொகை என்பதற்கு எதிர்ச் சொல்லான (Opposite), குறுந்தொகை என்பதைப் பக்கத்தில் நிறுத்தின் பொருள் தெளிவுக்கு ஏற்புடைத்தாயிருக்கு மாதலாலும், மிகுந்த அளவில் மேற்கோளாக உரையாசிரியர்களாலும் பிறராலும் எடுத்தா ளப்படும் அளவிற்குக் குறுந்தொகையே நற்றிணையினும்