பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எட்டுத் தொகை 207. யைத் தொகுத்தவர் பூரிக்கோ. இதனை இந்நூல் இறுதியில் முன்னோரால் எழுதப்பட்டுள்ள, “இத் தொகை முடிந்தான் பூரிக்கோ. இத் தொகை பாடிய கவிகள் இருநூற்றவர். இத்தொகை நாலடிச் சிற் றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக் கப்பட்டது." என்னும் பகுதியால் அறியலாம். இதனைத் தொகுப்பித்த வர் பெயர் தெரியவில்லை, அடுத்து,-நற்றிணையைத் தொகுத் தவர் பெயர் தெரியவில்லை; தொகுப்பித்தவர், பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவர். இதனை, நற்றிணை யின் இறுதியில் முன்னோரால் எழுதப்பட்டுள்ள, 'இத் தொகை ஒன்பதடிச் சிறுமையாகப் பன்னிரண்டடி காறும் உயரப்பெற்றது; இத் தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.” என்னும் பகுதியால் அறியலாம். நான்காவதாகிய புற நானூற்றைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் இருவர் பெயருமே அறியப்படவில்லை. ஐந்தாவது நூலாகிய ஐங்குறு நூற்றைத் தொகுத்தவரையும் தொகுப்பித்தவரையும் இந் நூலின் இறுதியில் முன்னோரால் எழுதப்பெற்றுள்ள. “இத் தொகை தொகுத்தார், புலத்துறை முற்றிய கூட லூர் கிழார், இத் தொகை தொகுப்பித்தார், யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையார்” என்னும் பகுதியால் அறியலாம். அடுத்து, - ஏழாவ தாகிய கலித் தொகையைத் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை : தொகுத்தவர் நல்லந்துவனார். இதனை, இந்நூலிற்கு உரை யெழுதிய நச்சினார்க்கினியர் இறுதியில் எழுதியுள்ள, 'முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே-என்புழிச் சொல்லாத முறை யாற் சொல்லவும் படுமென்றலின், இத்தொகையைப் பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தலென இம் முறையே கோத் தார் நல்லந்துவனார்’ -