பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/235

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எட்டுத்தொகை 211 நீர்முதல் நிதியங் கரந்த கொல்லோ" நீங்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண் தங்கலர் வாழி தோழி' (251) என்னும் மாமூலனாரின் பாடல் பகுதிகள் அறிவிக்கின்றன. நந்த மன்னர் இவ்வாறு மறைத்து வைத்தது, 'மா அலெக் சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த போதாகும் என்று வரலாற்றறிஞர்கள் கூறியுள்ளனர். 'மா அலெக்சாந் தரின் காலம் கி.மு. 356 முதல் கி.மு. 323 வரையுமாகும் அதாவது-கி.மு. நான்காம் நூற்றாண்டாகும். நந்தர்காலமும் கி.மு. நான்காம் நூற்றாண்டென வரலாறு கூறுகிறது. வட இந்தியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தென்னகத்தில் பரவ நீண்டநாள் தேவைப்படாது. அந்த நாளைய தென்னக மன்னர்க்கு வட இந்தியாவோடு வெற்றித் தொடர்பு உண்டு. கி.மு. நான்காம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச் சியைக் கூறும் அகநானூற்றுப் பாடல்கள், கி.மு. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னரே இயற்றப்பட்டிருக்கும். இந்தப் பாடல்கள் அகநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன. வெனில், இந்தத் தொகுப்புப் பணி, கி.மு. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்பே நடைபெற்றிருக்க வேண்டும் என்பது புலனாகலாம். தொகுத்த வரலாறு எட்டுத் தொகை நூல்களைத் தொகுத்த வரலாற்று முறை பற்றிப் பலர் பலவாறு கூறலாமாயினும், ஏறக்குறைய எல்லாரையும் தழுவினாற்போல் பொதுவாகத் தொகுத்து நாம் ஒரு முறையினைக் கூறலாம். இப்படியிருக்கலாம்’ என ஒரு தோற்றமாகக் (உத்தேசமாகக்) கூறப்படும் முறையே யாகும் இது. - பாண்டியரது ஆதரவில் மதுரையில் நடைபெற்ற கடைச் சங்கத்தில் புலவர்கள் பலர் குழுமித் தமிழாராய்ந்து வந்தனர். அங்கிருந்த புலவர்களே யன்றித் தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் புலவர்கள் வாழ்ந்து வந்தனர். தமிழகம் முழு வதும் வாழ்ந்த புலவர்களுக்கு எப்படியோ மதுரைத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்பு இருந்தது. கடைச் சங்க காலத்தில்