பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 தமிழ் நூல் தொகுப்புக் கலை வாழ்ந்த புலவர்கள்.பல பாடல்கள் இயற்றினர். கடைச் சங்க காலத்துக்கு முன் இயற்றப்பட்ட பாடல்கள் பலவும் நாட்டில் நடமாடிக் கொண்டிருந்தன. தக்க முறையில் காலாமையால் இந்தப் பாடல்களுள் பல நாளடைவில் மறையத் தொடங்கின. எனவே, இருக்கும் பாடல்களையாயினும் தொகுத்துப் பல் வேறு நூல் உருவங்களில் நிலைக்கச் செய்யவேண்டும் என அரசரும் புலவரும் விரும்பினர். இதை மேற்பார்வையிட்டுச் செய்யச் சங்கத்தில் சில சிறுசிறு குழுக்களும் அமைக்கப்பட்டிருக் & Gl) TLD. உதிரிப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. தலைவன் தலைவியரது அகவாழ்வைப் பற்றிப் பேசும் அகப்பொருள்' பாடல்களும் இருந்தன. அகப்பொருள் அல்லாத-வெளிப் புற வாழ்வைப் பற்றி விவரிக்கும் புறப்பொருள் பாடல்களும் இருந்தன. புறப்பொருள் பாடல்களினும் அகப் பொருள் பாடல்களே மிகுதியாயிருந்தன. இதனால், தமிழர்கள் புற வாழ்க்கையினும் அக வாழ்க்கையிலேயே மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்று பொருள் கொள்ளலாகாது; அகவாழ் வின் நிலைக்களனாகிய வீடு திருந்தின், புற வாழ்வின் நிலைக் களனாகிய நாடு திருந்தும் என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. இந்த அடிப்படையில், அன்றைய நாளில் அகப்பொருள் பாடல்கள் பல்கி மலிந்தன. பாக்களுள்ளும், கலிப்பா, பரிபாட்டு முதலியவற்றைக் காட்டிலும் ஆசிரியப் பாக்களே மிக்கிருந்தன. அந்தக் காலத் தில் ஆசிரியரைப்போல ஆசிரியப் பாக்களே தலைமை பெற்றி ருந்தன. எனவே, அறிஞர்கள் முதலில் ஆசிரியப் பாக்களைத் திரட்டினர். அவை பல பொருள் பற்றிப் பல காலத்தில் பலரால் பாடப்பெற்ற உதிரிப் பாடல்களாகும். அவற்றுள் புறப்பாடல்களினும் அகப்பாடல்கள் மிக்கிருந்தன. அஃதாவது, அகப்பாடல்களும் புறப்பாடல்களும் மூன்றுக்கு ஒன்று (3:1) என்ற விகிதத்தில் இருக்கக் கண்டனர். அவற்றுள் சிறந்தன - வற்றைத் துாற்றிப் புடைத்துத் தேர்ந்தெடுத்தனர். அகப் பொருள் பாடல்கள் ஆயிரத்திரு நூறு கிடைத்தன. இவற்றை ஒரே நூலாகத் தொகுப்பின் படியெடுப்பதற்கும் படிப்பதற்கும்