பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எட்டுத் தொகை - 213 கையாள்வதற்கும் அலுப்பு சலிப்பாய் இருக்கு மெனக் கருதி மூன்று பிரிவாக்கினர். இவ்வாறு மூன்றாகப் பிரிக்காமல் அறுநூறு - அறுநூறு பாடல்களாக இரண்டாகப் பிரித்திரிக் கலாம்; ஆனால், பாடல்களின் அளவும் அமைப்பும் இரண்டு சரிபாதியாகப் பிரிக்கும் அளவில் இல்லை. நானூறு - நானூறு - நானூறு பாடல்களாக மூன்றாகப் பிரித்துத் தொகுக்கும் நிலையிலேயே பாடல்களின் அளவும் அமைப்பும் இருந்தன. அகப்பொருள் பற்றிய ஆயிரத்திருநூறு ஆசிரியப் பாக் களும் நான்கு அடிகளுக்குக் கறையாமலும் முப்பத்தோர் அடிகளுக்கு மேற்படாமலும் இருந்தன. இவற்றுள், பெரிய பாடல்களை யெல்லாம் சேர்த்து ஒரு நூலாகவும், சிறிய பாடல்களை யெல்லாம் சேர்த்து ஒரு நூலாகவும், நடுத்தர மான பாடல்களையெல்லாம் சேர்த்து ஒரு நூலாகவும் தொகுக்க விரும்பினர். இந்தத் திட்டத்தின்படி, பதின் மூன்று அடிகளுக்குக் குறையாமல் பார்த்தால் நானூறு பாடல்களும், பதின் மூன்று அடிகளுக்குக் கீழே ஒன்பது அடிகளுக்குக் குறை யாமல் பார்த்தால் நானூறு பாடல்களும், ஒன்பது அடி களுக்குக் கீழே நான்கு அடிகளுக்கு குறையாமல் நானூறு பாக் சளும் தேறுவதைக் கண்டறிந்தனர். இந்த, இயற்கை யமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆயிரத்திருநூறு பாடல் களையும் நானூறு பாடல்கள் வீதம் பகுத்து மூன்று நூல் களாகத் தொகுத்தனர். ஆயிரத்திரு நூறு பாடல்களுக்கும் மிகுதியாகவும் கிடைத்திருக்கலாம்; ஆயினும், மேற்கூறிய அடி யளவுக்குப் பொருந்தி வரும்படியாக உள்ள நானுறு-நானூறு - நானுாறு பாடல்களாக ஆயிரத்திருநூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கலாம். இவ்வாறு தொகுத்த மூன்று நூல்களின் விவரம் வருமாறு:- - ஆயிரத் திருநூறு பாடல்களுள், பதின்மூன்று அடிகளுக்குக் குறையாமல் முப்பத்தோர் அடிகள் வரையும், கொண்ட நானுறு நீண்டதெடும் பாடல்களின் தொகுப்புக்கு நெடுந் தொகை நானுாறு’ எனப் பெயர் வழங்கப்பட்டது. ஒன்பது அடிகளுக்குக் கீழே நான்கு அடிகள் வரையுங்கொண்ட நானுாறு சிறிய-குறுகிய பாடல்களின் தொகுப்புக்குக் குறுந்தொகை