பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


214 தமிழ் நூல் தொகுபுக் கலை நானூறு' எனப்பெயர் வழங்கப்பட்டது: இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாக, ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடிவரை கொண்ட நானுாறு நல்ல பாடல்களின் தொகுப்புக்கு 'நற்றிணை நானூறு' எனப் பெயர் வழங்கப்பட்டது. நெடுந் தொகைக்கும் குறுந்தொகைக்கும் இடைப்பட்டது நற் றிணையை இடைத் தொகை என்று வழங்கியிருக்கலாமே எனின், அஃது அவ்வளவு அழகுபடாது. அப்படி வழங்குவது மரபு அன்று. முதல் தொகை’, 'கடைத்தொகை என்று பெயர் வைத்திருந்தால், இடைப்பட்டதை இடைத் தொகை' என லாம்; இஃது அப்படியில்லையல்வா? எனவே, பொருத்தமாக ஏதாவது ஒரு பெயர் வைக்க வேண்டுமே என்பதற்காக, 'நற்றிணை என்னும் பெயர் வழங்கப்பட்டது. நல்திணை.நல்ல திணை - நற்றிணை. குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல் பாலை என்னும் ஐந்து திணைகளையும் பற்றிக்கூறும் நல்லநூல் என் னும் பொருளில் நற்றிணை என்னும் பெயர் சூட்டப்பட்டது. இம்மூன்று நூல்களும் ‘நானூறு' என்னும் எண்ணுப் பெயர் பின்னே இணைக்கப் பெற்றும் வழங்கப்படும்; இணைக்கப் படாமல் வெற்றுபடியாகவும் வழங்கப்படும். இந்த மூன்று நூல்களையும் தொகுத்தவர்களும் தொகுப் பித்தவர்களும் ஆகிய உருத்திரசன்மர், உக்கிரப் பெருவழுதி, பூரிக்கோ, பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆகியோர் கடைச் சங்க காலத்தவர்கள்-புலமைபெற்றவர்கள்: என்னும் செய்தி முன்பே விளக்கப்பட்டுள்ளது. நூல் தொகுப் பில் மற்றும் பலரும் பங்கு கொண்டிருப்பினும், இந்நால்வரும் இன்றியமையாப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு, குறிப்பிட்ட குழுக்களுக்குத் தலைமை தாங்கியிருப்பர். இதுகாறும், நானூறு பாடல்கள்வீதம் கொண்ட அகப் பொருள் தொகை நூல்கள் மூன்றினைப் பற்றிப் பார்த்தோம். இனிப் புறப்பெர்ருள் தொகை நூலுக்குள் புகுவோம். புறப் பொருள் பற்றிய உதிரிப் பாடல்கள் ஏறக்குறைய நானுாறு கிடைத்திருக்கும். அவற்றைத் தொகுத்துப் புறநாஇாறு என்னும் பெயரில் ஒரு நூலாக உருவாக்கினர். சரியாக நானூறு பாடல்களே கிடைத்திருக்குமென்று சொல்லமுடி.