பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii வேறு கலைகளைப் பற்றிய செய்திகள் ஒரு சேரத் திரட்டித் தரப்பெற்றுள்ள பெரிய நூலும் கலைக் களஞ்சியம் என்னும் சிறப்புப் பெயருக்கு உரியதாகும். இந்த அடிப்படையுடன் கலைக் களஞ்சிய வரலாற்றைக் காண்பாம். கலைக் களஞ்சிய வரலாறு: சொற்பொருள்: கலைக் களஞ்சியம் என்பது ஆங்கிலத்தில் Encyclopaedia என்று சொல்லப்படும். இதன் பொருள், மாந்தர் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத செய்திகள் (பொருள்தள்) அனைத்தும் அடங்கியிருப்பது - என்பதாகும். அகராதி சொல்லுக்குப் பொருள் மட்டும் கூறும். கலைக் களஞ்சியமோ, ஒவ்வொரு கலையைப் பற்றியும்-பொருளைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளைக் கூறும். இதிலுள்ள தலைப்புகளும் அகர வரிசையில் இருக்கும். சீனக் கலைக் களஞ்சியம்: சீனர்களே முதல் முதலில் கலைக் களஞ்சியப் பணியைத் தொடங்கினராம். ஆனால், அவர்களின் கலைக் களஞ்சியம் இக்காலத்ததுபோல் கட்டுரை வடிவில் இல்லாமல் சுருக்கமாக எழுதப்பட்டது. முதல் சீனக்களஞ்சியம் கி.பி. 10ஆம் நூற்றாண் டில் தோன்றியது. அது, நூற்றாண்டுக்கு நூற்றாண்டு சிறிது சிறிதாக வளர்ந்து, 18 ஆம் நூற்றாண்டில் பெரிய அளவினதாய் 5020 தொகுதிகள் கொண்டதாயிற்று. மேலை நாடுகளில்: கலைக் களஞ்சியம் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதல்முதல் கிளறியவர், இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன் வாழ்ந்த அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க அறிஞ ராவார். பல நாடுகளிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 1541 ஆம் ஆண்டு காலத்தில் செர்மனியில் வாழ்ந்த ரிங்கர்பல்ஜியஸ் என்பவரே முதல் முதலாக ‘என்சைகிளோப் பீடியா (Encyclopaedia) என்னும் பெயரைக் கையாண்டார்.