பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ட்டுத் தொகை 219 றோடு சுளகிற் சீறிடம் நீக்கி அழுத லானாக் கண்ணள் மெழுகு மாப்பிகண் கலுழ்ரீ ரானே.” மேலுள்ள மூன்று பாடல்களுள், குறுந்தொகைப் பாடலி லும் நற்றிணைப் பாடலிலும் தும்பியைத் தூது விடுவதாக ஆசிரியர் அறிவித்துள்ளார். இவர் பெயர் கீரனார்’ என்பது “கீரனார்' என்னும் பெயரில் பலர் உள்ளனராதலின் அவர்களி ஒளின்றும் வேறுபிரித்துக் காட்ட இவர் 'தும்பி சேர் கீரனார்’ என வழங்கப்பட்டார். இவருடைய பாடல்களிலுள்ள தும்பி' என்னும் சொல் இவரது பெயரோடு இணைக்கப்பட்டது. இந்தக் காரணத்தால் இவர் தும்பி. சேர் கீரனார். ஆனார். இவர் பெயரால் உள்ள கதிர்மூக் காரல்’ என்னும் புறநானூற்றுப்பாடலில், தும்பியைப் ப்ற்றிய வாடையே இல்லை என்பது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதாகும். உண்மையான இயற்பெயர் தெரியாமையால் குறுந் தொன்கப் பாடலிலும் நற்றிணைப் பாடலிலும் உள்ள தொடர் களால் பெயர் , வைக்கப்பெற்ற புலவர் இருவரை மேலே கண்டோம். இவ்விருவரின் பாடல்கள் இதேபெயர்களுடன் புற நானுாற்றிலும் உள்ளன. குறுந்தொகையிலும் நற்றிணையிலும் தொடர்களைக் கொண்டு ஆசிரியர்கட்குப் பெயர்கள் வைக்கப் பட்டன; ஆனால், அந்தத் தொடர்கள் புறநானூற்றில் இல் லாத நிலையிலும், அந்தப் புறப்பாடல்களின் ஆசிரியர்களாக அவர்களை எவ்வாறு கூறமுடியும்? இதில் ஏதோ ஒர் உண்மை இருக்கிறது; கண்டுபிடிப்போம்: நெடுந்தொகையும் குறுந்தொகையும் நற்றிணையும் முதலில் தொகுக்கப்பட்டு விட்டன. இந்நூற் பாடல்களுள் ஆசிரியர் பெயர் தெரியாதனவற்றிற்கு, அவ்வப் பாடல்களி லுள்ள சிறப்புத் தொடர்களால் ஆசிரியர் பெயர்கள் உருவாக் கப்பட்டன. இம் மூன்று நூல்களும் தொகுக்கப்பட்ட பின்னர்ப் புற நானூறு தொகுக்கப்பட்டது. இந்நூலில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்களுக்கு, முன்பே தொகுத்த குறுந்தொகை யில் உள்ள தொடரால் பெயர்பெற்ற ஆசிரியர்கள் உரியவர் களாக்கப்பட்டனர். -