பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


220 தமிழ் நூல் தொகுப்புக் கலை இங்கே ஒர் ஐயம் எழலாம்! குறுந்தொகைப் பாட்லிலுள்ள தொடரால் பெயர் பெற்றவரே இந்தப் புறநானூற்றுப் பாட லையும் பாடினார் என்பது எவ்வாறு தெரியும் என்ற ஐயம் இங்கே எழலாம் அல்லவா? இதற்கும் இதோ விடை இருக்கி றது: முதலில் ஒர் ஏர் உழவனாரைப் பற்றிப் பார்ப்போம். ஒரு வீட்டில் ஒர் ஒலைச் சுவடியில் ஆசிரியர் பெயர் இல்லாமல் இரண்டு ஆசிரியப் பர்க்கள் ஒரே கையெழுத்தால் எழுதப்பட்டி ருந்தன. அவற்றுள், ஒரு பாடல் அகப்பாடல்; மற்றொன்று புறப்பாடல். அந்தச் சுவடி சங்கத்தார் கைக்குச் சென்றது. சங்கத்தினர், அகப்பாடலில் உள்ள 'ஓர் ஏர் உழ்வன்' என்னும் சிறப்புத் தொடரைக் கொண்டு, ஓர் ஏர் உழவனார் என் அப்பாடலின் ஆசிரியருக்குப் பெயர் சூட்டி, அந்தப் பாடலைக் குறுந்தொகைத் தொகுப்பில் சேர்த்தனர். இரு பாடல்களுள் அகப்பாடல் போக எஞ்சியிருப்பது புறப்பாடல். அகப்பாட லோடு இணைந்திருந்த அந்தப் புறப்பாடலை, ஓர் ஏர் உழவ னார்’ என்னும் அதே ஆசிரியர் பெயருடன் பின்னர்ப் புற நானூற்றுத் தொகுப்பில் சேர்த்துவிட்டனர். . - அடுத்து.-தும்பி சேர் கீரனாரிடம் வருவோம். ஒரு வீட் டில் கீரனார் என்னும் ஆசிரியர் பெயருடன் ஒர் ஒலைச் சுவடி யில் ஒரே கையெழுத்தில் ஏழு பாடல்கள் இருந்தன. அவற் றுள், அகப்பொருள் பாடல்கள் ஆறு, புறப்பொருள் பாடல் ஒன்று. அகப்பொருள் பாடல்கள் ஆறுக்குள் இரண்டில் தும்பி பற்றிய செய்தி இருந்தது. எனவே, மற்ற ரேனார்களினின்றும் வேறுபாடு தெரிவதற்காக, இந்தப் பாடல்களின் ஆசிரியராகிய கீரனாரைத் தும்பி சேர் கீரனார்’ என்றாக்கி, ஆறு பாடல் களுள் ஐந்து குறியனவா யிருந்ததால் குறுந்தொகைத் தொகுப் பிலும், ஒன்று இடைப்பட்டதாயிருந்தால் நற்றிணைத் தொகுப்பிலும் சேர்த்தனர். ஆறுபோக எஞ்சியிருப்பது ஒரு புறப்பாடல். அதனை அதே ஆசிரியர் பெயருடன் பின்னர்ப் புறநானுற்றுத்தொகுப்பில் சேர்த்தனர். இதுதான் உண்மையா யிருக்கக் கூடுமல்லவா? _ - * * - . இவ்வாறன்றிச் சிலர் வேறு விதமாகவும் கூறலாம். ஒர் ஏர் உழவனார் என்பது, தொடரால் பெற்ற கார்ணப் பெய