பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/245

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எட்டுத் தொகை 221 அன்று; அவரது இயற்பெயரே. சம்பந்தர், சுந்தரர் முதலான வர்கள் தம் பாடல்களில் தம் பெயர்களை அமைத்திருப்பது போல, ஒர் ஏர் உழவனாரும் தமது பாடலில் தமது பெயர் அமையச் செய்தார்-என்று சிலர் கூறலாமல்லவா? இது பொருந்தாது. சம்பந்தர் சுந்தரர் முதலியோரின் பெயர்கள் முழு உருவத்தில் அப்படியே உள்ளன. ஆனால், ஒர் ஏர் உழவ னார் முதலியோரின் பெயர்கள் முழுஉருவத்தில் பெயர்களாக இல்லை; அரைகுறைத் தொடர்களாக உள்ளன; அத்தொடர் களைக் கொண்டு பெயர்களை உருவாக்க வேண்டியதாயிற்று; எனவே, இந்தக் கொள்கை பொருந்தாது. - நிற்க,-பாடல்களிலுள்ள தொடர்களால் பெயர்பெற்ற புல வர்களை அடிப்படையாகக் கொண்டு இதுகாறுங் கூறியவற் றால்,-நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை என்னும் மூன்று அகப்பொருள் நூல்களும் முதலில் தொகுக்கப்பட்டன. என்பதும், புறப்பொருள் நூலாகிய புறநானூறு பின்னர் தொகுக்கப்பட்டது என்பதும், (ஆகக்கூடியும் நான்கும் ஏறக் குறைய ஒரேகாலத்தில் ஒரே இடத்தில் ஒரே பெரிய தலைமை யின் கீழ்த் தொகுக்கப்பட்டன என்பதும்) புலனாகலாம். ஐந்து குறு நூறுகள் - இனி, எட்டுத் தொகை நூல்களுள் ஐந்தாவதான ஐங்குறு நூற்றிற்கு வருவோம். குறுகிய ஐந்நூறு பாடல்களைக் கொண் டது இங்குறுநூறு: அகப்பொருள் பற்றிய இது, மூன்றடிக்குக் குறையாத - ஆறடிக்கு மிகாத ஆசிரியப்பாக்களால் ஆனது. மேலே கூறிய நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை என் னும் மூன்று அகப்பொருள் நூல்களும் உதிரிப் பாடல்களின் தொகுப்புக்கள். ஐங்குறுநூறு அத்தகையதன்று. நூறு-நூறு பாடல்கள் வீதம் புலவர் ஐவரால் பாடப்பெற்ற (100x5=500) ஐந்நூறு பாடல்களைக் கொண்டதாதலின் இது தனிநூலாகத் தொகுக்கப்பெற்றது. மற்றும், முற்கூறிய மூன்று அகப்பொருள் தொகை நூல்களிலும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைப் பாடல்களும் மாறி மாறி வரும். ஐங்குறு நூறோ, நூறு நூறு பாடல்கள் வீதம் கொண்ட தனித்தனித் திணையாக-அதாவது - திணை வாரியாக அமைத்