பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தமிழ் நூல் தொகுப்புக் கலை எட்டுத்தொகை நூல்களுள் ஆறு நூல்கள் அகத்திணை பற்றியனவாயிருப்பினும், இந்நூலை மட்டுமே அகம் எனக் குறிப்பிடுவதிலிருந்து, இந்நூலின் தலைமையும் முதன்மையும் நன்கு விளங்கும். உரையாசிரியர்கள் அகத்திணைகள் ஐந்தை யும் விளக்குவதற்கு, மற்ற அகப்பொருள் நூல்களைவிட அக நானூற்றிலிருந்தே மிகுதியாக மேற்கோள்கள்காட்டியிருப் பதும் ஈண்டு எண்ணத் தக்கது. அகப் பாட்டு: இனி, நெடுந்தொகை அகப்பாட்டு என்னும் பெயரால் வழங்கப்பட்டுள்ளமைக்குச் சில சான்றுகள் காண்போம். நச்சி னார்க்கினியர் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில்,அகப்பாட்டு என்னும் பெயரைக் கையாண்டுள்ளார். தொல்காப்பியம் - பொருளதிகாரத்திலுள்ள முதல் ஐந்து இயல்களுக்கு நச்சினார்க் கினியர் வரைந்துள்ள உரைப்பகுதிகளிலிருந்து இயலுக்கு ஒன்று விதமாக ஐந்து சான்றுகள் காண்போம் (1) அகத்திணையியலில் ‘புணர்த்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்,என்றுதொடங்கும் (14-ஆம் நூற்பாவின்கீழ் கான லும் கழறாது, கழியும் கூறாது, என்னும் அகநானூற்றுப் (170 ஆம்) பாடலைத்தந்து அதன் கீழே, இவ் வகப்பாட்டு நெய்தல்; - இரங்கல் உரிப்பொருட்டாயிற்று'- என்று கூறியுள்ளார். (2) புறத்திணையியலில் வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்' என்று ெ தாடங்கும்(5ஆம், நூற்பாவின்கீழ், 'பல்லிதழ் மென்மலர்' என்னும் அகநானூற்றுப்(109) பாடலைச் சுட்டி 'பல்லிதழ் மென்மலர் என்னும் அகப்பாட்டினுள் 'அறனில் வேந்தன் ஆளும், வறனுறு குன்றம் பல விலங்கினவே எனக் காட்டுத் தலைவனை நாட்டுத்த்லைவன் பெய்ராற் கூறினார், -என்று கூறியுள்ளார். - (3) களவியலில் களவல்ர்ர்யினும் என்று தொடங்கும் (24, -ஆம்) நூற்பாவின் கீழ், உரு முரறு கருவிய' என்னும் அக நானுற்றுப் (158) பாடலைச் சுட்டிக் காட்டி, 'உரு முரறு கருவிய' என்னும் அகப்பாட்டினுள் மிடையூர்