பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தமிழ்நூல் தொகுப்புக் கலை மேலுள்ளவற்றால் அறியப்படும் செய்திகளாவன:-"பாண்டி யரது அவைக்களத்தில் புலவர் பெருமக்கள் குழுமி முத்தமிழ் ஆய்ந்தனர்: அகத்திணை பற்றிய பாடல்களுள் நீண்ட பெரிய நானூறு பாடல்களை நெடுந்தொகை என்னும் பெயரால் தொகுத்தனர், அந்த நெடுந்தொகை களிற்றியானைநிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என்னும் மூன்று உட் பிரிவுகளை உடைய்த். நெடுந்தொகையின் கருத்தை,இடையள நாட்டு மணக்குடியைச் சேர்ந்த பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவர் பாடினார்'-என்னும் செய்தியைப் பாயிரப் பாடல்ால் அறியலாம். தொகைக்குக் கருத்து அகவ லால் பாடினான்' என்றால், ஒன்றும் புலப்படவில்லை. அகவல் என்பது இந்தப்பாயிரப் பாடலைக் குறிக்கின்றதா, அல்லது வேறு எதையாவது குறிக்கின்றதா என்பது தெரியவில்லை. அது தெரியா விடினும், அகநானூறு மூன்று பிரிவாகத் தொகுக் கப்பட்டது என்னும் செய்தி இந்தப் பழம் பாடலால் நன்கு விளங்குகின்றது. நமக்கு அது போதும். அடுத்து,-பாயிரப் பாடலைத் தொடர்ந்து உள்ள மூன்று பத்திகளுள் மூன்றாவது பத்தியில், அகநானூற்றின் மூன்று பிரிவுகளுக்கும் உரிய பெயர்க் காரணங்கள் கூறப்பட்டுள்ளமை ஆராய்ச்சிக்கு உரியது. இனி, மூன்றினையும் முறையே ஒவ் வொன்றாக ஆய்வோம்: * -