பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/257

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


15. களிற்றியானை நிரை அகநானூற்றுப் பாயிரப் பாடலின் பின்னால், 'வண்டு படத் ததைந்த கண்ணி என்பது முதலாக நெடுவெண் மார் பின்' என்பது ஈறாகக் கிடந்த பாட்டு நூற்றிருபதும் களிற்றி யானை நிரை யெனப்படும். இப்பெயர் காரணத்தாற் பெற்றது; இது பொருட் காரணமாகக் கொள்க"-எனக் களிற்றியானை நிரையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இது பொருள் காரண மாகப் பெற்ற பெயராம். இந்த விளக்கம் போதுமானதாக இல்லை. களிறு=ஆண் யானை; நிரை= அணி, வரிசை, களிற்று யானை நிரை என்றால், ஆண் யானைகளின் அணி என்று பொருளாம். ஆண் யானைகளின் அணி எடுப்பான தோற்றத் துடன் இருக்கும். அதுபோல, எடுப்பான நடையும் மிடுக்கான கருத்தும் கொண்ட பாடல்களின் தொகுப்பு களிற்றியானை என வழங்கப்பட்டது. உடலுக்கு நன்மை பயக்கும்.சுக்கு, மிளகு திப்பிலி என்னும் மூன்று மருந்துச் சரக்குகளின் தொகுப்பாகிய 'திரிகடுகம்’ என்னும் பெயர், உயிருக்கு நன்மையளிக்கும் மும் மூன்று கருத்துக்கள் கொண்ட பாடல்களின் தொகுப்பாகிய ஒரு நூலுக்கு உவமையாகு பெயராய் வழங்கப்படுவது போன்றதே களிற்றியானை நிரை என்னும் வழக்காறு மாகும். மற்றப்படி, களிற்றியானையைப் பற்றிப் பேசும் பாடல்கள் மிகுதியாய் இருப்பதால் இப் பெயர் பெற்றது என்று கூற முடியாது, அடுத்த மணிமிடை பவளம் என்னும் தொகுதியிலும் கள் ற்றியானை பற்றி மிகுதியாகப் பேசப் பட்டுள்ளது. நூல் தொகுக்கும்போது, முதலில் நூற்றிருபது பாடல்கள் சீர் செய்யப்பட்டிருக்கும்; எனவே, அப் பகுதிக்கு முதல் பாகம்’ என்று பெயர் கொடுப்பதற்குப் பதிலாக'களிற்றியானை நிரை என்னும் எடுப்பான-பொருள் பொதிந்த பெயர் வழங்கப் பெற்றது. களிற்றியானை, என்னும் வழக்காறு பழைய நூல் களில் பல இடங்களில், உள்ளமை ஈண்டு எண்ணத்தக்கது. பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் பதிகப் பாட்டின் இடையே,