பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


234 . . தமிழ் நூல் தொகுப்புக் கலை கருங் களிற் றியானைப் புணர்கிரை நீட்டி இருகடல் நீரும் ஒரு பகல் ஆடி எனக் களிற்றியானை நிரை' என்னும் முழுத்தொடரும் அமைந்திருப்பது கண்டு மகிழ்க. 5೧fióuTನ நிரை என்பது அகநானூற்றின் ஒரு பிரிவாக இருப்பினும், ஒரு தனிநூல் போலவே அது மதிக்கப் ப்ட்டுள்ளது. நச்சின்ார்க்கினியர் தமது உரையில் அகநானூற் அப் பாடல்களை மேற்கோளாக எடுத்துக் காட்டுங்கால் அகம், அகப்பர்ட்டு என்றெல்லாம் நூற்பெயரைக் குறிப்பிடுவ தல்லாமல், பல இடங்களில் களிற்றியானை நிரை என்னும் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். மேலெழுந்தவாரியாகப் பார்த்திதற்கே, பத்து இடங்களுக்கு மேல் அவர் உரையில் இப் பெயர் எடுத்தாளப்பட்டிருப்பது தெரிகிறது. எடுத்துக்காட்டாக இரண்டு வருமாறு:- * - *(1) தொல்காப்பியம் அகத்திணையியலில் முதல் கரு உரிப்ப்ெர்ருள் என்ற மூன்றே என்று தொடங்கும் (3 - ஆம்) நூற்ப்ாவின் கீழ், வண்டுபடத் ததைந்த கிண்ணி என்று தொடங்கும் அகநானூற்று முதல் பாடல் முழுவதையும் தந்து, அதன் கீழே, இக் களிற்றியானை கிரையுள், பாலைக்கு முதலும் கருவும் வந்து உரிப் பொருளாற் சிறப்பெய்தி முடிந்: 5 .5, ་༥. என்று நச்சினார்க்கினியர் எழுதியுள்ளார். (2) நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு என்று தொடங்கும் (தொல் - அகம் - 9) நூற்பாவின் கீழ் 'கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை என்று தொடங். கும் அகநானுாற்றின் தொண்ணுாற் றேழாவதுபாடல் முழுவ தையும் தந்து, அதன் கீழே, “இக் களிற்றியானை கிரையுள் இருவகை வேனிலும் பாலைக்கண் வந்தன்." என்று அவர் வரைந்துள்ளார். இந்த அமைப்பை நோக்குங்கால் களிற்றியானை நிரையை ஒரு தனித் தொகை நூலாகவே கூறலாம் போலும்!