பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 மணிமிடை பவளம் மண்மிடை பவளம் என்னும் பிரிவைப் பற்றி, அகநானூற் றுப் பாயிரப் பாடலின் பின்னால், நா நகையுடைய நெஞ்சே என்பது முதலாக, நாள் வலை முகர்ந்த' என்பது ஈறாக க் கிடந்த பாட்டு நூற்றெண்பதும் மணிமிடை பவளம் எனப் படும். இதுவுங் காரணப் பெயர்; என்னை, செய்யுளும் பொரு ளும் ஒவ்வாமையால்.'-எனக் கூறப்பட்டுள்ளது. இதில் கூறப் பட்டுள்ள பெயர்க் காரணம் தெளிவாக இல்லை என்று கூறுவதனினும் பொருத்தமாக இல்லை என்றே கூறிவிடலாம்: மணி என்பது நீலமணி; இது நீலநிறமாய் இருக்கும். பவளம் சிவப்பாய் இருக்கும். நீலமும் சிவப்பும் எதிர் மாறானவை என்பதால், மணி மிடை பவளம் என்னும் பெயர் கொண்ட இந்த நூலில் செய்யுளும் பொருளும் ஒவ்வாமல் இருப்பதாகக் கருதி, அந்தக் காரணத்தினாலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டது எனப் பாயிரப் பகுதியை எழுதியவர் கூறியுள்ளார். மணிமிடை பவளம் என்றால், - நீலமணி கலந்த பவளம் - நீல மணியோடுகலந்த பவளம்- அஃதாவது நீல மணியும் பவளமும் மாறிமாறிக் கலந்து கோத்த மாலை என்று பொருளாம். இந்த விளக்கத்தின் உதவிக்கு வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை; அகநானூற்றிலேயே இரண்டு இடங்களில் இந்த விளக்கம் இடம் பெற்றுள்ளது. அவையாவன: "அரக்கத் தன்ன செங்கிலப் பெருவழிக் காயாஞ் செம்மல் தா அய்ப் பலவுடன் ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு மணிமிடைங் தன்ன குன்றம் கவைஇய” என்னும் அகநானூற்றுப் (14-ஆம்) பாடல் பகுதியில், நீல நிற ம்ான காயாம் பூக்கள் சிவந்த தம்பலப் பூச்சிகளுடன், வழியில் கலந்து கிடக்கும் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது. இதே காட்சி விளக்கம், 'மணிமிடை பவளம் போல அணிமிகக் காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப'