பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xxiv பாலும், 21 ஆண்டு காலத்தில், இதன் பத்துத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. கட்டுரை விளக்கத்திற்குத் துணையாகப் படங்கள் பல இடம்பெற்றுள்ளன. இந்த இயக்கம் சிறார் கலைக்களஞ்சியமும் உருவாக்கித் தந்துள்ளது. இந்த அடிப் படையுடன், நமது தமிழ் நூல் தொகுப்புக் கலைக்களஞ்சியம்’ பற்றி இனிக் காண்பாம்: நூல் தொகுப்பு: உலக மொழிகள் பலவற்றில், எல்லாப் பொருள்களையும் துறைகளையும் பற்றிய பொதுவான பெரிய கலைக் களஞ்சியங் கள் தோன்றியதல்லாமல், தனித்தனிப் பொருள் பற்றிய - தனித்தனித் துறை பற்றிய-தனித்தனிச் சிறப்புக் கலைக் களஞ்சியங்களும் தோன்றின. இது போல், தமிழ்நூல் தொகுப்பு என்னும் தனித்துறை பற்றிய கலைக் களஞ்சியம் இந்நூலாக வடிவம் பெற்றுள்ளது. நூல் த்ொகுத்தலே ஒரு கலையாகும். அத்தகைய தொகுப்புக் கலைத் துறைக்கு இந்நூல் ஒரு களஞ்சிய மாகும். அதாவது, தமிழ் நூல் தொகுப்புக் கலைக் களஞ்சிய மாகும், பல துறைகளைப் பற்றியது கலைக் களஞ்சியம். பல்வேறு துறைகளைப் பற்றிய தொகை நூல்கள் பலவற்றில் உள்ள செய்திகளை அறிவிப்பது இந்தக் கலைக் களஞ்சியமாகும். இந்தக் கலைக் களஞ்சிய நூலில் தரப்பெற்றுள்ள தலைப்புகள், o இயலாமை காரணமாக அகர வரிசையில் அமைக்கப்படவில்லை. இதை ஈடுகட்டும் வகையில், இந்நூலில் இடம்பெற்றுள்ள நூல் பெயர்களின் அகர வரிசை இறுதியில் தரப்பெற்றுள்ளது. இந்த நூற் பெயர் அகர வரிசையின் துணை கொண்டு, குறிப்பிட்ட நூல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். கால வாரியாகவும் ஆசிரியர் வாரியாகவும் நூல்கள் தரப்பெற்றிருப்பதால் அகர வரிசையில் அமைக்க இயலவில்லை என்பதும் கருதத் தக்கது,