பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/265

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நித்திலக்கோவை 241 1. "வியமெல்லாம் வேண்டேர் இயக்கம் கயமலர்ந்த தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர் நறுமுல்லை நான்காக காட்டி வெறிமாண்ட எட்டும் இரண்டும் குறிஞ்சியாக் குட்டத்து இவர்திரை பத்தா இயற்பட யாத்தான் தொகையி னெடியதனைத் தோலாச் செவியான் வகையி னெடியதனை வைப்பு. 2, ஒன்றுமுன் றைந்தேழொன் பான்பாலை ஒதாது கின்றவற்றின் நான்கு நெறிமுல்லை-அன்றியே ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு கூறா தவை குறிஞ்சிக் கூறு.' 3. 'பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல் நாலு களிமுல்லை நாடுங்கால்-மேலையோர் தேறும் இரண்டெட் டிவை குறிஞ்சி செந்தமிழின் ஆறு மருதம் அகம்.” வியம் - ஒற்றை யெண்கள்."வேண்டேர் இயக்கம்-பாலை. தாமரை - மருதம். குட்டத்து இவர் திரை-நெய்தல். தோலாச் செவியான் - கேள்வி யுணர்வு மிக்கவன். இந்தத் தொகுப்பு முறை மிகவும் வேலைப்பாடு கொண்ட ஒரு செயலாகும். அகநானூற்றுத் தொகுப்பில் பங்கு கொண்ட வர்கள், பாடல்களைத் திணைக்கு ஏற்ற எண்களில் தேர்ந் தெடுத்து அமைப்பதற்கு எவ்வளவோ பாடுபட்டிருப்பார்கள். இந்தத் தொகுப்பு முறையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் சிலவுள; அவையாவன; - (1) சில திணைகட்கு உரிய பாடல்கள் தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையிலிருந்து சிறிதளவு குறைந்தும் இருக்கலாம்; எப்படியோ நல்ல பாடல்களைத் தேடிப்பிடித்து எண்ணிக் கையை ஈடுகட்டியிருக்கலாம். - (2) சில திணைகட்கு உரிய பாடல்கள் தேவைக்கு ஏற்ற எண்ணிக்கைக்கு மேல் மிகுதியாக இருந்திருக்கலாம். அவற்றுள்