பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/266

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


242 தமிழ் நூல் தொகுப்புக் கல்ை சிலவற்றைக் கழித்து, மிகச் சிறந்த பாடல்களை மட்டும் தேர்ந்தெடுந்து அமைத்திருக்கலாம். (3) இன்னின்ன பாடல்கள் இன்னின்ன திணைகளைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடித்து, ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ற திணையும் துறையும் கொடுப்பதற்குக் காலமும் முயற்சி யும் மிகுதியாகச் செலவழிந்திருக்கும். இருப்பினும்; பாடல் எண்ணைச் சொன்னால் இன்ன திணை என அறிவதற்கும், குறிப் பிட்ட திணைக்குரிய பாடல்களைத் தொகுத்து ஆய் வதற்கும் இம்முயற்ச்சி வசதி செய்கிறது. (4) இந்த நூலில், ஐந்திணைகளுள் முல்லை, மருதம், நெய்தல் ஆகியவற்றினும் குறிஞ்சி இருமடங்கு இடம் பெற் றுள்ளது. குறிஞ்சியினும் மிகுதியாகப் பாலையானது நூலில் பாதியளவைத் தன்னுரிமை யாக்கிக் கொண்டுள்ளது. (5) நூலில் பாதியைப் பாலைப் பாடல்களே நிரப்பியிருப் பதால், பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் முறையே உரிய உரிப் பொருளாகிய பிரிதல், புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல் என்னும் ஐந்த னுள், பாலைத் திணைக்கு உரிய பிரிவுச் சுவையினையே மக்கள் பெரிதும் விரும்பிப் படித்துள்ளனர் என்பது புலப்படும். அதனால்தான், பாலைத் திணைப் பாடல்கள் பாவலர்களால் மிகுதியாகப் பாடப்பட்டுள்ளன. இவ்வாறாகப் பல எண்ணங்களை இத் தொகுப்புமுறை ஏற் படுத்துகிறது. இவற்றுள், பாலைத்திணை மிகுதியாயிருப்பது. பற்றிய எண்ணத்தை ஈண்டு இன்னும் சிறிது விவரிக்க வேண்டும். ஐந்திணைகளைக் குறிஞ்சி, பாலை என்னும் இரண் டனுள் அடக்கிவிடலாம். அஃதாவது. - மருதத்தை, குறிஞ்சியி லும், முல்லை நெய்தல் என்னும் இரண்டையும் பாலையிலும் அடக்கலாம். குறிஞ்சி என்பது புணர்தல்; மருதம் என்பது ஊடுதல் (போலிப் பிணக்கு). புணர்தலிலும் தலைவனும் தலைவியும் ஒன்றாயுள்ளனர்; ஊடலின் போதும் தலைவனும் தலைவியும் ஒன்றாயுள்ளனர்; ஊடுதலின் முடிவு (Result) கூடுதலே (புணர்த்லே) யாகும்; எனவே ஊடுதலாகிய மருதத்