பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/267

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நித்திலக்கோவை 243 தைப் புணர்தலாகிய குறிஞ்சியுள் அடக்கலாம். அடுத்து,ட பாலை என்பது பிரிதல், முல்லை என்பது பிரிந்தபோது ஆற்றி யிருத்தல் நெய்தல் என்பது பிரிந்தபோது ஆற்றாது இறங்கு தல் - அதாவது - வருந்துதல், எனவே பாலை, முல்லை, நெய் தல் என்னும் மூன்றுமே பிரிவுத் தொடர்பானவை என்பது பெறப்படும். பிரிதலாகிய பாலை இல்லையேல், பிரிந்துஆற்றி யிருத்தலாகிய முல்லைக்கும், பிரிந்து ஆற்ற முடியாமல் இரங்கு தலாகிய நெய்தலுக்கும் வேலையே இல்லை. எனவே, பிரிவின் கூறுகளாகிய முல்லையையும் நெய்தலையும் பாலைக்குள் அடக் கலாம். ஆகவே, ஐந்து என விரித்துச் சொல்லும் திணை களை, குறிஞ்சி பாலை என்று இரண்டாகத் தொகுத்துச் சொல்லிவிடலாம். இந்தக் கருத்து தொல்காப்பியத்தில் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிராவிடினும், செய்யுளியலில் உள்ள, 'இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமும் என்றிவை யிழுக்குநெறி யின்றி இதுவா கித்திணைக் குரிப்பொருள் என்னாது பொதுவாய் கிற்றல் பொருள்வகை என்ப.' என்னும் (208 - ஆம்) நூற்பாவிலிருந்து குறிப்பாய் எடுத்துத் கொள்ள இடமிருப்பதாகத் தெரியவில்லையா? எனவேதான், அகநானூற்றில் மற்ற மூன்றினும் குறிஞ்சியும் பாலையுமே மிகுந்த இடத்தைப் பெற்றுள்ளன. இனிக் குறிஞ்சியையும் பாலையையும் பற்றி ஆய்வோம்: குறிஞ்சி புணர்தல்: பாலை பிரிதல் இவையிரண்டும் ஒன்றுக் கொன்று எதிர் மாறானவை. குறிஞ்சி என்னும் கட்சித் தலை வனுக்கு ஆதரவாக மருதத்தான் ஒருவன் மட்டுமே வாக்கு (Wote) அளித்துள்ளான். பாலை என்னும் கட்சித் தலைவ னுக்கோ முல்லையான், நெய்தலான் ஆகிய இருவரின் வாக்கு கள் (Wotes) கிடைத்துள்ளன. எனவே, குறிஞ்சிக் கட்சியினும் பாலைக் கட்சியே பெரிய கட்சியாகக் காட்சியளிக்கிறது. இந்த அடிப்படையில் நோக்கின், அகநானூற்றிலுள்ள நானூறு வாக்குகளுள் (பாடல்களுள்) குறிஞ்சிக் கட்சிக்கு (குறிஞ்சி 80+