பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


244 தமிழ் நூல் தொகுப்புக் கலை மருதம் 40=120) நூற்றிருபது வாக்குகளும், பாலைக் கட்சிக்கு (பாலை 200+முல்லை 40+நெய்தல் 40=280) இருநூற்றெண் பது வாக்குகளும் கிடைத்துள்ளமை புலனாகும். பாலை மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட பெரும்பான்மை (Majority) வாக்குகள் பெற்றுமிகப்பெரிய கட்சியாகஅகநானூற் றில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. வேடிக்கைக்காக மேலே சொல்லியுள்ளபடி, மக்களாட்சி (சனநாயக) முறையில் பாலை பெற்றிருக்கும் பெரும்பான்மை அறிவிப்பதாவது, பாலைத்திணைக்கு உரியதான பிரிவு என்னும் துன்பச் சுவைப் பாடல்களையே பெரிதும் மக்கள் விரும்பியுள்ளனர் என்பதாகும். இருப்பினும், பொதுவில், குறிஞ்சிக்கு உரியதான புணர்தலாகிய இன்பச் சுவையினையே மக்கள் பெரிதும் விரும்பிப் படிப்பர் எனக்கூறிச் சிலர் கருத்து வேறுபாடும் கொள்ளலாம். நாடகக் கதையினை இன்பியல் (Comedy), துன்பியல் (Tragedy) என இரண்டாகப் பிரித்துக் கூறுவர். இன்பமாக முடிவது இன்பியல்; துன்பமாக முடிவது துன்பியல். ஈண்டு நாம் குறிஞ்சியை இன்பியல் போன்றது என்றும், பாலையைத் துன் பியல் போன்றதென்றும் கூறலாம். இதனை, இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் என்னும் தொல்காப்பிய நூற்பா (செய்யுளியல் - 208) குறிப்பாய் உணர்த்துவதுபோல் இல்லையா? இந்த இன்பியல், துன்பியல் இரண்டனுள், இளைஞர்களுள் பெரும்பாலோர் இன்பியலையும், முதியவர் களுள் பெரும் பாலோர் துன்பியலையும் மிகுதியாக விரும்பிப் படிப்பர் எனலாம். யான், 'மலர் மணம் என்னும் நெடுங்கதை (நாவல்) ஒன்று எழுதி வெளியிட்டுள்ளேன். அது துன்பியலாகும். அந் நூலில், கதைத் தலைவன் - தலைவியரது காதல் வாழ்வு முற்பகுதியிலும், மணம் செய்து கொண்டு நடத்திய குடும்ப வாழ்வு இடைப்பகுதியிலும், துன்பமான பிரிவு இறுதியிலும் இடம் பெற்றுள்ளன. அச்சாகும் முன், யான் நூலை எழுதிக் கொண்டிருந்தபோது, என் உறவினர் வீட்டு இளைஞன்