பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நித்திலக்கோவை 245 ஒருவன் நாடோறும் வந்து, யான் எழுதஎழுதத் தாள்களை வாங்கி ஆர்வமுடன் படித்துக் கொண்டேயிருந்தான். கதையில் தலைவன் - தலைவியரது காதல்வாழ்வு முடிந்து மண வாழ்க்கை தொடங்கியது. அவ்வளவுதான்; மறுநாளிலிருந்து அந்த இளைஞனைக் காணவில்லை. நூல் அச்சானவுடன் வாங்கிப் படித்த இளைஞர் ஒருவர் என்னை நோக்கி, "காதலர் கள் திருமணம் செய்து கொண்டதோடு நீங்கள் கதையை முடித்திருக்க வேண்டியதுதானே? பின்னால் ஏன் பிரியவிட் டீர்கள்? ;- என்று வெகுளியுடன் வினவினார். மலேயாவி லிருந்து ஒர் இளைஞர், விறுவிறுப்பாக வந்து கொண்டிருந்த கதையை நீங்கள் துன்பியலாக முடித்து வாசகர்களை ஏமாற்றி யிருக்கக் கூடாது; இன்பியலாக முடித்திருக்க வேண்டும்; - என்று கடுஞ் சினத்துடன் கடிதம் எழுதியிருந்தார். இப்படி இன்னும் சிலர்! ஆனால், எனது கதையின் துன்பியல் முடிவைப் பற்றிப் பெரியவர்கள் குறை கூறவில்லை. முதலில் இன்பியலை மிகுதியாக விரும்பிப் படிப்பவர்கள். பின்னர் அதில் தெவிட்டல் ஏற்பட, துன்பியலில் சுவைகாணத் தொடங்குவர். இவ்வாறே. புணர்ச்சி பற்றிய குறிஞ்சிப் பாடல்களை விரும்பிப் படித்தவர்கள், பின்னர், பிரிவுபற்றிய பாலைப் பாடல்களின் சுவையில் ஈடுபாடுகொள்வர். புணர்ச்சி என்பது காமவெறியாட்டத்தின் விளைவாகும். பிரிவின்போது தான் காதல் உணர்வு கொழுந்து விட்டுத் தளிர்த்துக் காணப் படும். காதல் சுவையின் உயர்ந்த “எவரெஸ்ட் கொடுமுடி எல்லையைக் காணவேண்டுமாயின், புணர்ச்சிபற்றிய பாடல் களில் காண முடியாது; பிரிவு பற்றிய பாடல்களில் அதனை - நன்கு காண முடியும். எனவேதான் பிரிவுபற்றியபாலைப் பாடல்களை மிகுதியாகப் படித்துச் சுவைக்கும் பழக்கம் மக்களி டையே ஏற்பட்டது அதனால், பாவலர்களும் பாலைப் பாடல் களை மிகுதியாகப் பாடினர். படிப்பவர்கட்கு மட்டுமன்றி: பாடும் பாவலர்கட்கும் காதலர்களின் பிரிவுநிலையைக் கற்பனை செய்து ஓவியப்படுத்திக் காட்டுவதிலேயே சுவை மிகுதி. இதுகாறுங் கூறியவற்றால், அகநானூற்றில் பாலைப்