பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தமிழ் நூல் தொகுப்புக் கலை பாடல்கள் மிகுதியாக இடம்பெற்றிருப்பதற்கு உரிய பொருத்த மர்ன காரணம் புலப்படலாம். - முற்ை வைப்பு: தொல்காப்பியத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பால்ை என்னும் வரிசையில் ஐந்திணைகள் கூறப்பட்டுள்ள மையை, அகத்திணையியலில் உள்ள, 'மர்யோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (5) 'நடுநிலைத் திண்ையே நண்பகல் வேனிலொடு முடிவுகிலை மருங்கின் முன்னிய நெறித்தே' (8) (நடுவுநிலைத்திணை=பாலை) என்னும் நூற்பாக்களால் அறியலாம். தொல்லாசிரிராகிய தொல்காப்பியர் இந்த முறையில் வரிசைபடுத்தியிருந்த அக நானூற்றில் பாலை, குறிஞ்சி, முல்லை, ம்ருதம், நெய்தல் என்னும் வரிசையில் - தொல்காப்பியத்திற்கு மாறாகப் பாடல் களை அமைத்துத் தொகுத்திருப்பது பொருந்துமா? என ஓர் ஐயம் எழலாம். தொல்காப்பிய முறைக்கு மாறாகவும் அமைக் கலாம்; அதற்குத் தொல்காப்பியத்திலேயே ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது - என்பதாக உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். இதனை, மாயோன் மேய என்னும் நூற்பாவின்கீழ் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள, - “உம்மை எதிர்மறை யாகலின், இம் முறையன்றிச் சொல்லவும்படும் என்பது பொருள்ாயிற்று. அது தொகை களினும் கீழ்க்கணக்குகளினும் இம்முறை மயங்கிவரக் கோத்த வாறு காண்க.”. என்னும் உரைப்பகுதியாலும், அதே நூற்பாவின்கீழ் இளம் பூரணர் எழுதியுள்ள,