பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நித்திலக்கோவை 247 'உம்மை எதிர்மறையாகலின் இம்முறையன்றிப் பிறவாய் பாட்டாற் சொல்லவும் படும் என்றவாறு. காடு நாடு மலை கடல் என்பதே பெருவழக்கு. இன்னும் சொல்லிய முறை யாற் சொல்லவும் படும் என்றதனான், இம் முறையன்றிச் சொல்லவும்படும் என்று கொள்க. அஃதாவது, அவற்றுள் யாதானும் ஒன்றை முன்னும் பின்னுமாக வைத்துக் கூறுதல். அது சான்றோர் செய்யுட் கோவையினும் பிற நூலகத்துங் கண்டு கொள்க." என்னும் உரைப் பகுதியாலும் உணரலாம். தொகை நூல்களுள் தொல்காப்பிய முறை மாறிவந்திருப்பதாக உரை யாசிரியர்கள் உணர்த்தியுள்ளனர். எனவே, நெடுந் தொகையுள் பாலைக்கு முதலிடம் தந்திருப்பதில் பிழையொன்றும் இல்லை. ஈண்டு மேலும் ஒன்று நோக்கத் தக்கது. ஐங்குறு நூற்றிலும் கலித்தொகையிலும் ஐந்திணைப் பாடல்கள் கலந்து தொகுக்கப்படாமல், திணைவாரியாகத் தொகுக்கப்பட்டிருப் பதுபோல, அகநானூற்றிலும் தொகுக்கப்ப்ட்டிருக்கலாமே - என்ற வினா எழலாம். அவ்விரு நூல்களிலும் ஒவ்வொரு திணைக்கு உரிய பாடல்களும் ஒவ்வொரு புலவரால் பாடப் பட்டவை யாதலானும், ஏறக்குறைய ஒத்த எண்ணிக்கை யுடையவை யாதலானும், அந்த நூல்களில் திணை வாரியாகத் தொகுக்கப்பட்டன. அகநானூற்றிலோ, ஒவ் வொரு திணைக்கும் உரிய பாடல்கள் பலரால் பாடப் பட்டவை யாதலானும், ஒத்த எண்ணிக்கையில் இன்றி, 200,80 40,40,4. என்னும், வேறுபட்ட எண்ணிக்கையில் இருத்தலானும் திணைவாரியாகத் தொகுக்க முடியவில்லை. அகநானூற்றுத் தொகுப்பு முறை மிகவும் அழகியது. நானுாறில் பாதிப் பாடல்கள் பாலையாயிருப்பதால், ஒன்று விட்டு ஒன்றாக ஒற்றையெண்களில் பாலையை யமீைத்தும், பாலைப் பாக்களின் இடையிடையே ஒன்றுவிட்டு ஒன்றாக மற்றப் பாக்களை அமைத்தும் தொகுத்துள்ள முறையின் அழகே அழகு! தமிழ்ர்கள் பாடல் தொகுப்புக் கலையில் காட்டி யுள்ள உயர்திறனுக்குச் சான்றுபகர இஃது ஒன்றே போதுமே!