பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/274

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18.குறுந்தொகை தொகுப்புப் பொறுப்பு இந்த நூல், இறையனார் அகப்பொருள் உரையில் 'குறுந் தொகை நானூறு, என்றும் பெயருடன் இரண்டாவதாக அமைந்துள்ளது. இந் நூலைப் பொறுத்தவரையும், நற்றிணை நல்ல குறுந்தொகை, என்று தொடங்கும் செய்யுளிலும், நல்ல' என்னும் சிறப்பு அடைமொழியுடன் இரண்டாவது இடம் அளிக்கப்பெற்றுள்ளது. இந்த நூலின் தொகுப்புமுறை பற்றி முன்பு ஒரிடத்தில் விரிவாகக் கூறியுள்ளோமாயினும், இதுபற்றி இந் நூலின் இறுதியில் தரப்பட்டிருக்கும் பகுதியினைப் பார்ப் போம்: “இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர். இத்தொகை நாலடிச் சிற்றெல்லை யாகவும், எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது.” இந்தப் பகுதியைக் கொண்டு பார்க்குங்கால் சில சிக்கல் கள் எழுகின்றன. மற்றத் தொகை நூல்களின் இறுதியில் தொகுத்தான்-தொகுப்பித்தான் என்று இருக்கக் காணலாம். ஆனால் இங்கே, இத் தொகை முடித்தான் பூரிக்கோ' என்று உள்ளது. முடித்தான் என்றால், தொகுத்தவனா? - தொகுப் பித்தவனா? முடித்தான்’ என்பது, தொகுத்தான்-தொகுப் பித்தான் என்னும் இரண்டிற்கும் பொதுவாய் இருப்பது போல் தோன்றவில்லையா எனவே,-இந்த நூலைத் தொகுத்தவர் ஒருவர்? தொகுப்பித்தவர் வேறொருவர் என இருவர் இல்லை-எல்லாப் பொறுப்பும் பூரிக்கோ' என்பவரையே சாரும் என்பது புலப்படவில்லையா? ஆசிரியர் எண்ணிக்கை அடுத்து, - இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்' (205 பேர்) - என்று எழுதப்பட்டுள்ளது. நூலிலுள்ள புலவர் களின் பெயர்களை எண்ணிப் பார்த்தால்? ஏறக்குறைய எண் ணிக்கை ஒத்து வருகிறது. ஆனால், நூலின் இடையிடையே உள்ளபத்துப் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் அறிவிக்கப்பட்