பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 தமிழ் நூல் தொகுப்புக் கலை சுவடிகளில் 391-ஆம் பாடல் எட்டடிகளுடன் உள்ளது எனக் கூறியுள்ளார்கள். அதனை எட்டடிச் செய்யுளாகவே கொள்ள லாம். அதில் பிற்காலத்தில் எப்படியோ ஒர். அடி இடையிலே புகுந்துவிட்டிருக்க வேண்டும். இது, ஏடு பெயர்த்து எழுது வோரால் நேர்ந்திருக்கலாம். அடுத்து, 307- ஆம் செய்யுளைக் குறுந்தொகைப் பாடல் இல்லையென நீக்கிவிடலாம் எனக் கூறியுள்ளார்கள். இவ்வாறு செய்வதால், குறுந்தொகையில் ஒன்பது அடிச் செய்யுள் இல்லாமையோடு, நானூறு பாடல்கள் என்ற எண்ணிக்கையும் சரியாய் விடுகிறது. அங்ங்னமெனில். இப்போது 307 ஆவதாகக் காணப்படும் இந்தப் பாடலை எந் தக் காகம் எங்கிருந்து தூக்கிக் கொண்டுவந்து குறுந்தொகைக் குள் போட்டிருக்கக்கூடும்? இந்த வினாவிற்கும் தக்க விடையி ருக்கிறது. ஆசிரியப் பாவாலான இந்த அகப்பொருள் பாடல் குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை என்னும் மூன்று தொகை நூல்களுள் ஏதேனும் ஒன்றினைச் சேர்ந்ததாயிருக்க வேண்டும். ஒன்பது அடிகள் கொண்ட இந்தப் பாடல், எட்டு அடிகளுக்கு மேற்படாத குறுந்தொகைப் பாடலாக இருக்க முடியாதது போலவே, பதின் மூன்று அடிகளுக்கு குறையாத நெடுந்தொகைப் பாடலாகவும் இருக்கமுடியாது; எனவே, இந்தப் பாடல், ஒன்பது அடிச் சிற்றெல்லையுடைய நற்றிணைப் பாடலாக இருக்கலாம். அங்கனம் இதனை நற்றிணையில் சேர்த்தால், நற்றிணையில் நானூற்றுக்கு மேல் ஒன்று கூடி விடுமே என்று வினவலாம். அந்த இடர்பாட்டிற்கு இடமில்லை நற்றிணையில் 234-ஆம் பாடல் கிடைக்கவில்லை; எந்த ஒலைச் சுவடியிலும் 234-ஆம் பாடல் இல்லை. எனவே குறுந்தொகை யில் கூடுதலாக உள்ள 307-ஆம் செய்யுளை, நற்றிணையில் இல் லாத 234-ஆம் பாடலாகச் சேர்த்துக் கொள்ளலாம். - பழங்காலத்தில் நற்றிணை, குறுந்தொகை முதலிய ஓலைச் சுவடிகள் ஒன்றாக வைக்கப்பட்டிருந்திருக்கும். நற்றிணையின் 234-ஆம் பாடல் எழுதியிருந்த ஒலை தழுவிக் கீழே விழுந்திருக் கும். அதனை எடுத்துத் தவறுதலாகக் குறுந்தொகை ஒலைச் சுவடியில் செருகிவிட்டிருப்பர். இவ்வாறாகக் கூடுதலாகவும் குறைவாகவும் அமைந்துவிட்ட குறுந்தொகை நற்றிணைச் சுவடிகளைப் பார்த்து அவற்றில் உள்ளவாறே பின்னர்ப் படி’