பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1. நூல் தொகுப்புக் கலை முதல் பெருங்கலை: முதல்முதல் குழந்தைக்குத் தாயின் வாயிலாகவே மொழி அறிமுகமாகிறது. அதனால்தான், அந்தக் குழந்தை பின்னர் பேசும் மொழி தாய்மொழி எனப்படுகிறது. சேய் தாயிட மிருந்து முதலில் பெற்றுச் சுவைக்கும் மொழிச் செல்வம் சொற்களோ சொற்றொடர்களோ அல்ல; அந்தச் செல்வம் பாட்டு-பாட்டு-பாட்டேதான்! சொற்களையும் சொற்றொ டர்களையும் குழந்தையின்மேல் அள்ளிப் பொழிந்து தாய் கொஞ்சுவாள்; ஆனால் குழந்தைக்கு ஒன்றும் புரியாது. கொஞ்சும் தாய்க்குச் செய்யும் பதில் உதவியாக-கைம் மாறாகக் குழந்தை புன்சிரிப்புப் பூக்கும்-அவ்வளவுதான்! தாய் பாட்டுப் பாடினாலோ, குழந்தை அதில் சொக்கிப்போகும். தொட்டிலை ஆட்டிக்கொண்டே தாய் பாடும் தாலாட்டுப் பாடலைச் சுவைக்காத சேயும் உண்டோ?. தாலாட்டுப் பாடா மல் அன்னை தொட்டிலை ஆட்டினால், குழந்தை ஊம்-ஊம்’ என்று ஒலியெழுப்பும். அந்த ஒலிக்குப் பொருள் 'பாட்டுப் பாடு' என்று அன்னைக்கு இடும் ஆணையாகும். அன்னை இடையிலே பாடலை நிறுத்தினாலும், மீண்டும் ஊம்-ஊம்’ என்ற கட்டளை யெழும். அந்த அளவுக்குத் தாயின் தாலாட்டுப் பாட லைக் குழந்தை சுவைக்கிறது. ஆம்! மக்களினம் முதலில் அறிந்து சுவைக்கும் கலை பாடல் கலை தான்! முதல் பெருங் கலை கவிதைக் கலையே! தனிமை மொழி: - குழந்தை முதலில் பேசும் மொழி, சொற்களோ சொற் றொடர்களோ அல்ல. இவை குழந்தைக்கு முதலில் தெரிவதற் கில்லை. குழந்தை முதலில் பேசும் மொழி பாட்டுத்தான். தனித்துப்படுத்துக் கொண்டிருக்கும் போது குழந்தை ஏதோ ஒலி யெழுப்பிக் கொண்டிருக்கும்; அந்த ஒலி தனிச்சொல்லோ தனிச் சொற்றொடரோ அன்று; அது பாட்டு! பாட்டு! அந்த ஒலி யைக் கேட்ட தாய், கண்ணு, என்னமோ பாடறானே! என் செல்வம் என்ன பாடுகிறான்?’ என்று சொல்லிக்கொண்டே