பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 தமிழ் நூல் தொகுப்புக் கலை களும் உரியனவாம். இவற்றுள் மருதத்திற்கு உரிய பாக்களின் எண்ணமைப்பு மட்டும் வியத்தற்குரியதாயுள்ளது. மருதத்திற்கு உரிய முப்பத்திரண்டு பாடல்களுள் ஒன்று தவிர மற்றவை பத்து என்னும் எண்முறையமைப்பைக் கொண்டுள்ளன. மருதப் பாடல்களின் எண்கள் வருமாறு: - 20, 30, 40, 50, 60, 70 80, 90, 100, 120, 150, 170, 180, 200, 210, 216, 230, 250, 260, 280, 290, 300, 310, 320, 330, 340, 350, 360, 370, 380, 390, 400,ஆகிய முப்பத்திரண்டு எண்களாம். இவற்றுள் 216 ஆம் பாடல் தவிர மற்றவை யாவும் பத்து என்னும் எண் முறை யமைப்பைப் பெற்றிருப்பதைக் காணலாம். மருதப்பாடல்களுள் ஒன்று மட்டும் 216 என்னும் ஆறு என்ற எண் முறையைத் கொண்டிருப்பது வியப்பாயுள்ளது. இதில் ஏதோ இயற்கைக் தவறுதல் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. 210 - ஆம் பாடலும் 230 - ஆம் பாடலும் மருதமாயிருப்பதால், 022ஆம் பாடலும் மருதமாயிருக்க வேண்டும். ஆனால், நூலில்220-ஆம் எண் பெற்றுள்ள சிறுமணி தொடர்ந்து” என்னும் பாடல் குறிஞ்சி பற்றியதாயுள்ளது. இதுதான் 216 - ஆம் பாடலா யிருக்கலாம். இது கைத்தவறுதலாக 220 - ஆம் எண்ணுக்கு மாறிப் போயிருக்கலாம். எனவே, இதனை 216ஆம் எண் கொண்டதாக்கி, இப்போது 216 - ஆம் எண் கொண்டுள்ள “துனிதீர் கூட்டமொடு” என்னும் மருதப் பாடலுக்கு 220-ஆம் எண் தந்துவிடின் அமைப்பு முறை அழகாயிருக்கும். இதனால் நற்றிணையின் மருதப் பாடல்கள் அனைத்துமே பத்து என்னும் எண்முறை கொண்டவை என்னும் பொருத்தப்பாடு நிலவும். நற்றிணையில் மருதப் பாடல்களையாவது இவ்வாறு பொருத் தமான எண்முறையில் தொகுத்திருப்பது ஒருவகைக் கலைக் கூறாகும். - கிடைக்காத பாடல் நற்றிணையின் 234-ஆம் பாடல் எந்த ஒலைச்சுவடியிலும் கிடைக்கவில்லை. நற்றிணையின் இரண்டாம் பதிப்பை 1956ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள சைவ சித்த்ாந்த நூற்பதிப்புக் கழகத்தார், இறையனார் அகப்பொருளின் 28 - ஆம் நூற் பாவின் உரையில் நூற்பெயர் குறிப்பிடாமல் மேற்கோளாக