பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/281

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறுந்தொகை 257 எடுத்துக் காட்டப்பெற்றுள்ள ஒரு பாடலை, நற்றிணையில் காணமற்போன 234 - ஆம் பாடலாக இருக்கலாம் எனப் பின்னிணைப்பில் தந்துள்ளனர். அப் பாடல் வருமாறு: "சான்றோர் வருத்திய வருத்தமும் நுமது வான்றோய் வன்ன குடிமையும் நோக்கித் திருமணி வரன்றும் குன்றம் கொடியவள் வருமுலை யாகம் வழங்கினோம் நன்றே அஃதான்று, அடைபொருள் கருதுவி ராயின் குடையொடு கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் வஞ்சியோடு உள்ளி விழவின் உறந்தையும் சிறிதே' இந்தப் பாடல் நற்றிணையின் 234 - ஆம் பாடலாக இருக் கலாம் என ஒரு தோற்றமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது இறையனார். அகப்பொருள் உரையில் ஏறக்குறையப் பதினைந்து இடங்களில் நற்றிணைப் பாடல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளமையின், இஃதும் நற்றிணைப் பாடலாயிருக்க லாம் எனச் சொல்லத் தோன்றினும், மேலே குறுந்தொகை என்னும் தலைப்பில் நாம் குறிப்பிட்டுள்ள ஒரு பாடலை ஈண்டு நினைவுக்குக் கொண்டுவரவேண்டும். ஒன்பது அடிக ளுடன் குறுந்தொகையில் கூடுதலாக உள்ள 307-ஆம் பாடலை நற்றிணையின் 234-ஆம் பாடலாகக் கொள்ளலாம் என முன்பு கூறியுள்ளோம். அந்தப் பாடல் வருமாறு: வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச் செவ்வாய் வானத் தையெனத் தோன்றி இன்னம் பிறந்தன்று பிறையே யன்னோ மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன் உயங்குநடை மடப்பிடி வருத்த நோனாது நிலையுயர் யாஅம் தொலையக் குத்தி வெண்ணார் கொண்டு கைகவைத் தண்ணாங் தழுங்க னெஞ்சமொடு முழங்கும் அத்த நீளிடை அழப்பிரிங் தோரே...'