பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. புறநானூறு இந்த நூல், இறையனார் அகப்பொருள் உரையில் 'புறநானூறு' என்னும் பெயருடன் . நான்காவதாக வைக்கப் பெற்றுள்ளது. புறப்பொருள் பற்றிய நூல்களுள் தலைமை நூலாகிய இது, புறம், புறப்பாட்டு, புறம்பு நானுாறு என்னும் பெயர்களாலும் வழங்கப்படுகிறது. புறம்: இந்நூல் புறம் என்னும் சுருக்கப்பெயரால் வழங்கப்படு வதற்கு மூன்று எடுத்துக் காட்டுக்கள் வருமாறு: (1) தொல்காப்பியம்-அகத்திணையியலில் 'நாடக வழக் கினும் உலகியல் வழக்கினும் என்று தொடங்கும் (53 - ஆம்) நூற்பாவின் உரையில், - "ஆசிரியமும் வெண்பாவும் வஞ்சியும் அகம் புற மென்னும் இரண்டிற்கும் பொதுவாய் வருமாறு நெடுந் தொகையும் புறமும் கீழ்க்கணக்கும் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் என்பனவற்றுட் காண்க” எனப் புறநானூற்றைப் புறம்’ என நச்சினார்க்கினியர் கூறியிருப்பது காண்க. (2) அடுத்து,-தொல்காப்பியம் - புறத்திணையியலில் வெறி யறி சிறப்பின் வெவ்வாய் வேலன்' என்று தொடங்கும் (5-ஆம்) நூற்பாவின் உரையிடையே, நச்சினார்க்கினியர், பெருநீர் மேவற் றண்ணடை யெருமை என்று தொடங்கும் புற நனூற்றுப் (297-ஆம்) பாடல் முழுவதையும் தந்து, அப் பாடலின் கீழே, அப் பாடலின் சில அடிகளிலுள்ள கருத்தைச் சுட்டிக் காட்டி, "மடல் வன் போந்தை போல் நிற்ப லென நெடுமொழி தன்னோடு புணர்த்தவாறு காண்க. சீறுார் புரவாகக் கொள் ளேன், தண்ணடை கொள்வே னெனத் தன்னுறு தொழில் கூறினான். இதுவும் பொது. புறம்”