பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/284

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


260 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்று வரைந்து, இந்தப் பாடல் உள்ள நூலின் பெயராகப் புறம் என இறுதியில் குறிப்பிட்டிருப்பது காண்க. இவ்வாறு இன்னும் சில இடங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார். (3) மற்றும், எட்டுத் தொகை நூல்கள் இன்னின்னவை என்று அறிவிக்கின்ற, நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று இத் திறத்த எட்டுத் தொகை’ என்னும் பழம் பாடலிலும் புறநானூறு புறம்’ எனச் சுருங்கச் சொல்லப்பட்டுள்ளமையைக் காணலாம். புறப்பாட்டு இனி, இந்நூல் 'புறப்பாட்டு' என்னும் பெயரால் வழங்கப் பட்டுள்ளமைக்குச் சான்றுகள் காணலாம். தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நூலைப் புறப்பாட்டு' என்னும் பெயரால் குறிப்பிட்டுள்ளார்; மூன்று இடங்கள் மட்டும் வருமாறு: (1) தொல்காப்பியம் - அகத்திணையியலில் புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது' என்று தொடங்கும் (55-ஆம்) நூற்பாவின் கீழ், “...புறத்திணைக் கண் இயற்பெயர் அளவிவரும் என்ப தனானே, முரசு கடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும்’ (158) என்னும் புறப்பாட்டு, எழுவர் மாய்ந்த பின்றை எனப் புறத்திணைத் தலைவர் பலராய் வந்தது' என வரைந்துள்ளார். (2) அடுத்து, புறத்திணையியலில் 'கொள்ளார் தேளங் குறித்த கொற்றமும் என்று தொடங்கும் (12 - ஆம்)நூற்பாவின் கீழ், 'கழிந்தது பொழிந்தென (203) என்னும் புறப்பாட்டினுள், 'ஒன்னார் ஆரெயில் அவர்கட் டாகவும் நூமதெனப் பாண்கட