பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறநானூறு 261 னிறுக்கும் வள்ளியோய்' என்பதும் அது. ஆனா வீகை யடு போர் (42) என்னும் புறப்பாட்டும் அது." என்று எழுதியுள்ளார். (3) மற்றும், புறத்திணையியலில் "தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்கு' என்று தொடங்கும் (36-ஆம்) நூற்பாவின்கீழ், மண்டினிந்த நிலனும் என்று தொடங்கும் நீளமான புறநானூற்றுப் (2) பாடல் முழுவதை யும் தந்து, அதைத் தொடர்ந்தாற்போல், "என்னும் புறப்பாட்டுப் பகை நிலத்தரசற்குப் பயந்தவாறு கூறிப் பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்றி நிற்பர்யென அச்சந்தோன்றக் கூறி ஒம்படுத்தலின் ஒம்படை வாழ்த்தாயிற்று. காலனுங் காலம் (41) என்னும் புறப்பாட்டும் அது' என்று கூறியுள்ளார். இவ்வாறு, இன்னும் பல சான்றுகள் தரலாம். புறநானூற்றைப்புறப்பாட்டு' என வழங்கும் பழக்கம் தொல்காப்பியத்தின் வாயிலாகக் கற்றுக்கொள்ளப்பட்டது என்று சொல்லலாம். தொல்காப்பியம் செய்யுளியவில், அவை தாம் பாஅ வண்ணம் தாஅ வண்ணம்’ என்று தொடங்கும் 20് - ஆம்) நூற்பாவின் இடையேயுள்ள அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்' என்னும் பகுதியிலும் புறப் பாட்டு வண்ணம் முடிந்தது போன்று முடியாததாகும்’ என்னும் (செய்யுளியல்-217) நூற்பாவிலும், புறப்பாட்டு' என்னும் பெயர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதல்லவா? இதைக் கொண்டு, புறநானூற்றைப் புறப்பாட்டு' எனக் கூறும் வழக்காற்றைப் பிற்காலத்தினர் கற்றுக் கொண்டிருக்கலாம். புறச் செய்யுட்கள் புறநானூற்றுப் பாடல்களைப் புறச் செய்யுட்கள்’ என்று கூறும் வழக்கம் நச்சினார்க்கினியருக்கு உண்டு. இதனை, தொல்காப்பியம்-கற்பியலில், தோழி தாயே என்று தொடங் கும் (52-ஆம்) நூற்பாவின்கீழ் அவர் வரைந்துள்ள. '......இதற்குக் கோப்பெருஞ் சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்லார் துறந்தாரென்று