பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 தமிழ் நூல் தொகுப்புக் கலை புறநானூற்றில் முதலில் பாடலும், அதன் கீழே திணை யும், துறையும், அவற்றின் கீழே ஆசிரியர் பெயரும் அமைக்கப் பட்டுள்ளன. இந் நூற்பாடல்களுக்கு உரிய துறைகள், நூலைத் தொகுத்தவரால் கொடுக்கப் பட்டதாகத் தெரிய வில்லை; பின் வந்தவர்கள் கொடுத்திருக்க வேண்டும். என்பது நச்சினார்க்கினியர் கருத்து. இதனை, தொல்காப்பியம்புறத்திணையியலில், கொடுப்பார் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் என்று, தொடங்கும் (35 - ஆம்) நூற்பாவின் கீழ் அவர் எழுதியுள்ள. 'தத்தம் புதுநூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகவின், அவர் சூத்திரப் பொருளாகத் துறைகூற வேண்டுமென் றுணர்க." என்னும் உரைப் பகுதியால் அறியலாம். புறநானூற்றில் புறப்பொருளுக்கு உரிய பன்னிரண்டு திணைகளும் ஏறக் குறைய இடம் பெற்றுள்ளன. அத்திணைகள் பற்றிய விவரம் வருமாறு:- (1) வெட்சி=ஆனிரைகளைக் கவர்தல். (2) கரந்தை=ஆனிரைகளை மீட்டல். (3) வஞ்சி=பகைவர். நாட்டின் மேல் படையெடுத்தல். (4) காஞ்சி=நாட்டிற்கு உரியவர் தம் நாட்டைக் காத்தல், (5) உழிஞை=பகைவர் அரணைத் தாக்குதல். (6) நொச்சி= அரணுக்கு உரியவர் தம் அரணைக் காத்தல். (7) தும்பை=இருதரப்பினரும் தம் வலிமையை நிலைநாட்டப் போரிடுதல். (8) வாகை=வெற்றி பெறுதல், போர் வெற்றியேயன்றி மற்றத் துறை வெற்றி களும் வாகையுள் அடங்கும். (9) பாடாண்=ஒருவருடைய கொடை, வீரம் முதலிய சிறப்புக்களைப் புகழ்ந்து பாடுதல். (10) பொதுவியல்=இதுவரை சொன்னவற்றிற்குப் பொது வான செய்திகளையும், சொல்லாது விட்ட செய்திகளையும், நிலையாமை, வீடுபேறு முதலிய பொருள் பற்றியும் விளக்குதல். (11) கைக்கிளை=ஆண் பெண் இருபாலருள் ஒருவரிடம் மட்டும் உள்ள ஒருதலைக் காமம். (12) பெருந் திணை= பொருந்தாக் காமம்,