பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 - தமிழ் நூல் தொகுப்புக் கலை குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவாள். இவ்வாறாக, குழந்தை எழுப்பும் தொடர்ச்சியான இனிய ஒலி, தனிமையில், தன்னில் த்ானே பேசி-இல்லையில்லை-பாடி மகிழும் பாட்டாக உரு வங்கொண்டு, கேட்போரை மகிழ்விக்கிறது. இவ்விதமாக, பாட்டு, குழந்தை அறிந்து சுவைக்கும் முதல் பெருங்கலையாகத் திகழ்வது மட்டுமன்றி, அது தன்னில்தானே படைத்து வெளிப் படுத்திப் பிறரை மகிழ்விக்கும் முதல் பெருங்கலையாகவும் விளங்குகிறது. உரைநடை பேசுவதற்குத்தான்; உரையாடலுக்குத்தான்; எதிரே இன்னொருவர் இருக்கவேண்டும். பாட்டுக்கு அது வேண்டியதில்லை. தனிமையில் தனக்குத்தானே பேசிக்கொள் ளும் ம்ொழி பாட்டாகும். ஒருவர் எதிரே யாருமின்றித் தமக் குத்தாமே தொடர்ந்து உரையாடிக் கொண்டிருப்பாரேயாயின், அவரைக் கீழ்ப்பாக்கம் மருத்துவ மனைக்கு அனுப்பிவைப்பதற்கு வேண்டிய முயற்சியே நடைபெறத் தொடங்கும். ஒருவர் தனின்மயில் பாடிக்கொண்டிருப்பாரேயாயின், அவரைக் கீழ்ப் பாக்கம் செல்லும் வண்டியில் யாரும் ஏற்றமாட்டார்கள். குழந்தை மட்டுந்தானா தனிமையில் பாடுகிறது? தனிமை, யில் பாடாதவர் எவருமே இல்லை யெனலாம். சொல்லப் போனால், பிறர் முன்னே பாட்டு எழுவதனினும், தனியே இருக்கும்போதுதான் பாட்டு மிகவும் மிடுக்காக எழும்; அச்ச மின்றிக் கூச்சமின்றி ஆரவாரமாக எழும். அப்போது எவரே னும் வந்து விடுவாராயின், எழுந்த பாட்டு அடங்கி விடுவதும் உண்டு. வந்தவர் சென்றதும் மீண்டும் பாட்டு எழும். ஆம்! தனியே வழிப் பயணம் செய்பவர் பாடிக் கொண்டே செல்கிறார். இரவு நேரப் பயணத்தில் தனிமையின் திகிலைப் போக்கப் பாட்டுப் பெருந்துணை புரிகிறது. தனியே வண்டி யோட்டிச் செல்பவர் பாடிக்கொண்டே ஒட்டுகிறார். தனியே வேலை செய்பவர் பாடிக்கொண்டே செய்கிறார். எல்லாத் துறையினரும் பாடிக் கொண்டே தத்தம் வேலைகளைச் செய் கின்றனர். எங்கும் எதிலும்: பாடல் தனிமையில் திகழ்வதன்றிக் குழுவிலும் காணப்படு o,