பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/291

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறநானுiறு 267 நானூற்றில் முதல் பாட்டு கடவுள் வாழ்த்து; இரண்டாவது பாட்டு சேரமன்னர் ஒருவர் பற்றியது; மூன்றாவது பாட்டு பாண்டிய மன்னர் ஒருவர் தொடர்பானது; நான்காவது பாடல் சோழர் ஒருவர் பற்றியது; மீண்டும் அதே முறை-ஐந் தாவது பாட்டு சேரர்; ஆறாவது பாண்டியர்; ஏழாவது சோழர்; மீண்டும் அதே எட்டாவது சேரர்; ஒன்பதாவது பாண்டியர்; பத்தாவது சோழர்; இப்படியே சுழல்முறை செல் கிறது. போகப் போகச் சில இடங்களில் சேரரும் பாண்டியரும் மட்டும் மாறிமாறி வருவர்; சில இடங்களில் பாண்டியரும் சோழரும் மாறிமாறி வருவர்; சில இடங்களில் ஒருகுடி மன் னர் சார்பான பாடல்கள் சில தொடர்ந்து வரும்; நெடுந் தொலைவு சென்றதும், இந்தச் சுழல் முறையில்லாமல், பல ரைப் பற்றிய பாடல்களும், பல்பொருள் பற்றிய பாடல்களும் மாறிமாறிக் கலந்து வரும். கிடைத்திருக்கும் பாடல்களின் எண் ணிக்கைக்கு ஏற்பவும் பாடல்களில் அமைந்துள்ள பொருள் கட்கு ஏற்பவும் சுழல்முறை கையாளப்பட்டுள்ளது. சேரர் - பாண்டியர் - சோழர் என்னும் சுழல்முறைக்கு எடுத்துக்காட்டாக, முதல் சுழலில் உள்ள பெயர்கள் வரு மாறு:-இரண்டாவது பாட்டு சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாக ராயர் பாடியது; மூன்றா வது பாட்டு: பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த் தலையார் பாடியது; நான்காவது பாட்டு: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பரணர் பாடியது; இவ் வாறாகச் சுழல்முறை சென்றுகொண் டிருக்கிறது. இந்தச் சுற்றுச் சுழல் முறை நமக்கு அறிவிப்பதா வது: இப்போது பலரும் சொல்லி வருகிற சேர சோழ பாண்டி யர்' என்னும் வரிசை முறைக்கு மாறாக, சேர பாண்டிய சோழர்' என்னும் வரிசை முறையை இச்சுழல் முறை நமக்கு நினைவூட்டுகிறது. புறநானூற்றைத் தொகுத்தவர் பெயரோ நூலின் இறுதியில் - அல்லது, முதலில் - எங்கும் தரப்பட வில்லை; ஆயினும், புறநானூற்றைக் கடைச் சங்கத்தினர் தொகுத்தனர் என்னும் முடிவுக்கு நாம் முன்னரே வந்துள்