பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறு 269 இரண்டாவதாகவும், சோழரின் உறந்தை மூன்றாவதாகவும் கூறப்பட்டுள்ளன. "வடபுல இமயத்து வாங்குவில் பொறித்த எழுவுறழ் திணிதோள் இயல்தேர்க்குட்டுவன் வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே...' (48 - 50) 'கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன் தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் - மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே...” (65 - 67) "தூங்கெயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை நாடா நல்லிசை கல்தேர்ச் செம்பியன் ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே...” (81 - 83) என்பன பாடல் பகுதிகள். இத்தகைய முறைவைப்பே புற நானூற்றிலும் பின்பற்றப்ப்ட்டுள்ளது. மூன்று நிலைகள் தமிழ் ஐயா. உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தமது புற நானூற்றுப் பதிப்பு முகவுரையில் பின்வருமாறு ஒரு கருத்துத் தெரிவித்துள்ளார்கள்: "எனக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடிகளுள் ஒரு பிரதியின் தொடக்கத்தில் அறநிலை' என்று வரையப் பெற்றிருந்தது. அப்படியே பொருள்நிலை, இன்பநிலை என்ற பகுதிகள் எந்த எந்தப் பாடலிலிருந்து தொடங்குமோ வென்று தேடிப் பார்த்த தில் ஒரு பிரதியிலும் கிடைக்கவில்லை; ஆனாலும் இந்நூல் அறநிலை, பொருள்நிலை, இன்பநிலை என்னும் மூன்று பகுதி களாகப் பகுக்கப் பெற்றிருக்க வேண்டுமென்பது இதனால் ஊகித்தறியப் படுகின்றது." இவ்வாறு உ.வே.சா. அவர்கள் எழுதியுள்ளார்கள். ஒர் ஒலைச்சுவடியின் தொடக்கத்தில் 'அறநிலை என்று இருந்த தால், புறநானூறு மூன்று நிலைகளாகப் பகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உ.வே.சா. ககுத்து. இதுபற்றி இதற்கு மேல் அவர்கள் ஒன்றும் தெரிவிக்கவில்லை. ஆனால், இதுபற்றி இன் னும் ஒரு சிறிது நாம் சொல்ல வேண்டியுள்ளது. -