பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/294

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


270 தமிழ் நூல் தொகுப்புக் கலை எந்த ஒலைச் சுவடியிலுமே இடையில் பொருள் நிலை, இன்பநிலை என்னும் தலைப்புக்கள் இல்லை என்றும், அற நிலை என்னும் தலைப்பு ஓர் ஒலைச் சுவடியில் மட்டும் - தொடக்கத்தில் மட்டும் - இருந்தது என்றும் உ.வே.சா. அவர் கள் அறிவித்துள்ளார்கள். இந்த நிலையில், புறநானூறு மூன்று நிலைகளாகப் பகுக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவ தற்கு என்ன சான்று காட்ட முடியும்? உ.வே.சா. இருந்தால் அவரிடம் நேரில் சில செய்திகளைக் கேட்டறியலாம், அவர் இல்லையே! இப்பொழுது நமக்குக் கிடைத்திருக்கும் புறநானூற்றுத் தொகுப்புப் படியில் (பிரதியில்), அறநிலை பற்றிய பாடல் களனைத்தும் தனியாகவும், பொருள் நிலை பற்றிய பாடல்கள் அனைத்தும் தனியாகவும், இன்பநிலை பற்றிய பாடல்கள் அனைத்தும் தனியாகவும் தொகுத்து அமைக்கப் பெற்றிருக்க வில்லை. இந்த மூன்று நிலைப் பாடல்களும் மாறி மாறிக் கலந்தே உள்ளன. இந்த அமைப்பின்படி நோக்கின், புற நானூறு மூன்றுநிலைகளாகப் பகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எவ்வாறு கருத முடியும்? ஒருவேளை, அறநிலை என்று தொடக்கத்தில் குறித்திருந்ததாக உ.வே.சா. குறிப்பிட்டுள்ள ஒலைச் சுவடியில் மட்டும், மூன்று நிலைப் பாடல்களும் தனித் தனியாகப் பகுக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கக் கூடுமா? அந்தச் சுவடியை நேரில் பார்த்தாலேயே உண்மை விளங்கும். அந்தச் சுவடியில் அப்படியிருந்ததாக உ.வே.சா. அவர்களும் குறிப்பிட வில்லையே! புறநானுாற்றைத் தொகுத்தவர்கள் மூன்றுநிலைப் பாடல் களையும் கண்டபடி மாறி மாறி அமைத்திருப்பினும், பிற்பாடு வந்த ஓர் அறிஞர், தமது விருப்பம்போல், நானூறு பாடல் களையும் மூன்று நிலைகளாக அடுக்கி வரிசைப்படுத்தி எழுதி வைத்துக் கொண்டு பயன்படுத்தி வந்திருக்கலாம். பின் வருப வர்கள் இவ்வாறு தம் வசதிக்கு ஏற்ப வரிசைப்படுத்திக்கொள் வது வழக்கந்தான். எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சேந்தன் திவாகரம், பிங்கலம் என்னும் நிகண்டுகளில், இக் கால அகர வரிசை (Alphabetical Order) முறையில் சொற்