பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/295

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புற நானுாறு 271 பொருள் விளக்கம் தரப்படாமல் கண்டபடி இருந்தது. எனவே பின் வந்தவர்கள், சொற்பொருள் விளக்கும் குத்திரங்களை அகர வரிசையில் அடுக்கி ஒலைச் சுவடியில் எழுதி வைத்துக் கொண்டார்கள், பிற்காலத்தில் இந்த அகரவரிசை முறை யிலேயே அச்சிடப்பட்டது. ஆனால், நிகண்டு ஆசிரியர்கள் இந்த அகர வரிசை முறையில் எழுதவில்லை. பிற்காலத்தார் தம் விருப்பம்போல் சூத்திரங்களை வரிசைப்படுத்தி அமைத் துக் கொண்டனர்.இவ்வாறே, புறநானூற்றிலும் மூன்று நிலைப் பாடல்கள் பின் வந்தவரால் வரிசைப்படுத்தி எழுதப்பட்டிருக் கலாம். இத்தகு மனப்பான்மையின் விளைவே, ஓர் ஒலைச் சுவடியின் தொடக்கத்தில் அறநிலை என்னும் தலைப்பு தலைகாட்டியிருப்பதற்குக் காரணமாயிருக்கலாம். ஈண்டு இதுகுறித்து இன்னொரு விதமாகவும் எண்ணத் தோன்றுகிறது, பின்வந்தவர் புறநானுாற்றுப் பாடல்களை மூன்று தனித்தனி நிலைகளாகப் பிரித்து எழுதி வைக்கும் முறை ஒரு புறம் இருக்க,-அந்தந்த நிலைக்கு உரிய பாடலுக்கு மேல் அறநிலை, பொருள் நிலை, இன்ப நிலை என்னும் மூன்ற னுள் உரிய தலைப்பு ஒன்றினை எழுதி வைக்கும் முறையினை யும் கையாண்டிருக்கலாம் அல்லவா? சில பாடல்கள் இயற்கை யாகவே குறிப்பிட்ட ஒரு நிலையைச் சேர்ந்தனவாய்ப் பக்கத் தில்-பக்கத்தில் உள்ளன. சில இடங்களில், குறிப்பிட்ட ஒரு வரை ஒருவரே பாடிய பாடல்கள் சில, அவனை அவர் பாடி யது' என்னும் கீழ்க் குறிப்புத் தொடருடன் தொடர்ந்து காணப்படும். இவ்வாறே, ஒரிடத்தில் கைக் கிளைத் திணைப் பாடல்கள் தொடர்ந்தும் மற்றோரிடத்தில் பெருந்திணைப் பாடல்கள் தொடர்ந்தும் இருக்கவும் காணலாம். இத்தகைய இடங்களில் பல பாடல்கட்கும் சேர்த்து ஒரு தலைப்பு இட்டி ருக்கலாம். இங்ங்ணம் செய்திருப்பின், மூன்று தலைப்புக்களும் புறநானூற்றுக்கு இடையிடையே பல இடங்களில் மாறி மாறி இடப்பட்டிருக்கும். இவ்வாறும் யாரேனும் செய்திருக்கலாம். இத்தகு முயற்சியின் ஒரு பகுதியே, ஒர் ஒலைச் சுவடியின் தொடக்கத்தில் அறநிலை என்னும் தலைப்பு இருந்ததாகும் -என்றும் கொள்ளலாம். ஆனால், இத்தகு முயற்சியில் முழு