பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/296

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


272 தமிழ் நூல் தொகுப்புக் கலை வெற்றி கிடைக்காமல் ஒழிந்தது. இதில் முழு வெற்றி பெற்ற சுவடிகள் மறைந்து பேர்யிருக்க வேண்டும். இப்படி ஏதேனும் ஒர் அடிப்படையை வைத்து நோக்கினாலேயே, உ.வே.சா. அவர்கள் கூறியிருப்பதை நம்ப முடியுமன்றோ! இங்கே ஒர் ஐயம் எழ இடம் உண்டு. புறப்பொருளில் அந்நிலை, பொருள்நிலை என்னும் இரண்டுதானே இருக்க முடியும்? இன்பநிலையும் எவ்வாறு இருக்கக் கூடும்? இன்ப நிலை அகப்பொருளுக்கு உரியதல்லவா?, என்ற ஐயமே அது. இதற்குத் தகுந்த விடை இல்லாமற் போகவில்லை. புறப் பொருளுக்கு அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று நிலை களும் உண்டு எனப் பன்னிரு படலம் கூறுகின்றது. பன்னிரு படலம் இடைச்சங்க காலநூல் என்பதை மீண்டும் நினைவு செய்துகொள்ளவேண்டும். இனிப் பன்னிரு படல நூற்பாக்கள் வருமாறு: 'ஆன்ற சிறப்பின் அறம்பொருள் இன்பமென மூன்றுவகை நுதலியது உலகம் அவற்றுள் அறமும் இன்பமும் அகல தாகிப் புறன்எனப் படுவது பொருள்குறித் தன்றே.' "ஆங்ங்னம் உரைப்பின் அவற்றது வகையால் பாங்குறக் கிளந்தனர் என்ப அவைதாம் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உட்குவரு சிறப்பின் உழிஞை நொச்சி முரண்மிகு சிறப்பின் தும்பையுள் ளிட்ட மறனுடை மரபின் ஏழே ஏனை அமர்கொள் மரபின் வாகையும் சிறந்த பாடாண் பாட்டொடு பொதுவியல் என்ப., கைக்கிளை ஏனைப் பெருந்திணை என்றாங்கு அத்திணை யிரண்டும் அகத்திணைப் புறனே., புறத்திணைக்கு அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று நிலைகளும் உண்டு. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி,உழிஞை, நொச்சி, தும்பை ஆகிய ஏழும் புறம் ஆகும்; வாகை, பாடாண் பொதுவியல் ஆகிய மூன்றும் புறத்துக்கும் புறமானவை (புறப்