பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறு 273 புறம்) ஆகும்; கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் அகத்திற்குப் புறமான அகப்புறம் ஆகும்; ஆக இவை பன்னி ரண்டும் ஏதாவது ஒரு வகையில் புறம் என்னும் தகுதிக்கு உரியவையாகும்-என்பது மேலுள்ள நூற்பாக்களின் கருத்து. இந்த இலக்கணப்படியே புறநானூற்றுப் பாடல்கள் அமைந்துள்ளன. அப்பாடல்களுள், வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை என்னும் ஏழு திணைகளைச் சேர்ந்த அனைத்துப் பாடல்களும், வாகை-பாடாண்-பொது வியல் ஆகிய திணைப்பாடல்களுள் சிலவும் பொருள் நிலை யாகும்; வாகை, பாடாண், பொதுவியல் ஆகிய திணைப்பாடல் களுள் பல அறநிலை யாகும். ஒருதலைக் காமமாகிய கைக் கிளை, பொருந்தாக் காமம் ஆகிய பெருந்திணை என்னும் இரு திணைப்பாடல்கள் அனைத்தும் இன்ப நிலை யாகும். உ.வே.சா. அவர்கள் அறிவித்துள்ளபடி புறநானூற்றை மூன்று நிலைகளாகப் பாகுபாடு செய்திருப்பவர்கள் இந்த அடிப்படை யில்தான் அமைத்திருக்கக் கூடும். - கைக்கிளை, பெருந்திணை என்னும் இரண்டினையும் அகம் என்று தொல்காப்பியம் கூறினும், பன்னிரு படலம் போன்ற நூல்கள், இவ்விரண்டும் அகத்தோடு தொடர்புடைய புறம் (அகப்புறம்) என்று கூறியுள்ளன. நச்சினார்க்கினியரும், தொல் காப்பியம் .அகத்திணையியலில் உள்ள மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்’ என்னும் (54 - ஆம்) நூற்பாவின் கீழ். 'அகனைந்திணை எனவே, அகமென்பது நடுவுநின்ற ஐந் திணை யாதலின் கைக்கிளையும் பெருந்திணையும் அவற்றின் புறத்து நிற்றலின், அகப்புறம்' என்று பெயர் பெறுதலும் பெற்றாம் என்று கூறித் தொல்காப்பியத்தின் ஒட்டுறவைக்கொண்டே கைக்கிளையையும்பெருந்திணையையும் அகம்புறமாக்கிக் காட்டி யுள்ளார். எனவே தான், கைக் கிளைப்பாடல்களையும் பெருந் திணைப் பாடல்களையும் அந்தக் காலத்தில் புறநானூற்றில் சேர்த்துத் தொகுத்தார்கள். எனவே, புறநானுாற்றில் இன்ப நிலை இருப்பது குறித்து எந்த ஐயத்திற்கும் இடம் வேண்டிய தில்லை. புறத்திலும் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றுநிலை