பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/299

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


21. ஐங்குறுநூறு பெயர் அமைப்பு இந்த நூல், இறையனார் அகப்பொருள் உரையில் ஐங்குறுநூறு' என்னும் பெயருடன் ஐந்தாவதாக நிறுத்தப் பெற்றுள்ளது. அகப்பொருள் பற்றிய மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து திணைகளிலும் - ஒவ்வொரு திணைக்கும் நூறுவீதமாக அமைந்த குறுகிய ஐந்நூறு ஆசிரியப் பாக்களின் தொகுப்பாதலின், இஃது ஐங்குறுநூறு' என்று வழங்கப் பட்டது. இந்நூற் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் உடை யவை. நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு என்னும் நானுாறு பாக்கள் கொண்ட நான்கு தொகைநூல் களைக் காட்டிலும், அடியளவால் இது குறுகியதாதலின் ஐங் குறு' நூறு எனப்பட்டது. அந்த நான்கு நூல்களும் இந்த நூலும் ஆசிரியப்பாவால் ஆனவை என்ற விதத்திலும் முதல் மூன்று நூல்களும் இந் நூலும் அகப்பொருள் பற்றியவை என்ற வகையிலும் ஒற்றுமை உடையனவாயினும், இவ்விரு தரப்புக்கும் இடையே சில வேற்றுமைகள் உண்டு. (1) பாடலின் அடியளவாலும் பாடலின் எண்ணிக்கையாலும் இவ்விரு தரப்பும் வேறுபட்டிருப்ப தல்லா மல் மேலும் குறிப்பிடத்தக்க சிலவேறுபாடுகள் கொண்டுள்ளன. அவை வருமாறு: (2) அந்த நான்கும் நூற்றுவர்க்கு மேற்பட்ட பலரால் இயற்றப்பட்டவை; இந்நூல் குறிப்பிட்ட ஐவரால் ஆனது. (3) அவை நான்கும் உதிரிப் பாடல்களின் தொகுப்புக்கள்; ஐங்குறு நூறோ, ஐவரால் ஆக்கப்பட்ட ஐந்து சிறு நூல்களின் திரட்டாகும். (4) அந்த நான்கினுள், முதல் மூன்றிலும் ஐந்து திணைப் பாடல்களும் மாறிமாறிக் கலந்துள்ளன. ஐங்குறு நூற்றில் திணைவாரியாகப் பாடல்கள் உள்ளன; அஃதாவது,- ஒரு