பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் தொகுப்புக் கலை 5 கிறது. வயலில் வேலை செய்பவர்கள், படகு வலிப்பவர்கள். ஏற்றம் இறைப்பவர்கள், சுமை வண்டி தள்ளியிழுப்பவர்கள்: சுண்ணாம்பு இடிப்பவர்கள், ஊஞ்சல் ஆடுபவர்கள், கும்மியடிப் பவர்கள், கோலாட்டம் அடித்தாடுபவர்கள், அம்மானைக்காய் விளையாடுபவர்கள், இறை வணக்கம் செய்பவர்கள், ஒப்பாரி வைப்பவர்கள், இன்னபிற செயல்கள் செய்பவர்கள் அனை வரும் குழுவாகப் பாடிக் கொண்டே செய்வதைக் காண்கி றோம். இவ்வாறாகப் பாட்டு எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கும் கலையாகத் திகழ்கிறது. பாட்டு இன்றி வாழ்க்கை இல்லை என்று சொல்லிவிடலாம் போல் தோன்று கிறது. மக்கள் கலை: ஒவியம், சிற்பம், இசை முதலியனவாக உலகில் கலைகள் பல உண்டு. ஆய கலைகள் அறுபத்து நான்கினைப் பற்றியும் நாம் அறிவோம். ஆனால் இவற்றுள், இசையோடு இரண்டறக் கலந்து பின்னிப் பிணைந்து நிற்கும் பாடல் கலையே மக்க ளோடு நெருங்கிய தொடர்புடைய கலை என்பது மறைக்க முடியாத உண்மை. ஒவியம், சிற்பம் முதலிய கலைகளின் நுட் பத்தை உணர்ந்து கவைப்பவர் எத்தனை பேர்? இசை கலந்த பாடற்கலையைப் பருகி மகிழ்பவரின் எண்ணிக்கையே மிகுதி என்பது யாவரும் அறிந்த உண்மை. ஒவியம், சிற்பம் முதலிய உயர்கலைகளை இங்கே குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் குழவி முதல் கிழவி-கிழவர் வரை, படித்தவர் முதல் பாமரர் வரை, சுருங்கச் சொல்லின்-மக்கள் அனைவருமே, மற்றக் கலைகளினும் பாடல் கலையிலேயே பிறந்தது முதல் இறுதி வரை மிகுதியாக ஈடுபட்டு இன்புறுகின்றனரன்றோ? பாடல் கலையானது, தாலாட்டுப் பாடலாகவோ, விளை யாட்டுப் பாடலாகவோ, நாடக-திரைப் பாடலாகவோ, தொழிலுக்கப் பாடலாகவோ, பல்வேறு உணர்ச்சிப் பாடலா கவோ, அன்பு ததும்பும் (பக்திப் பரவசத்) தெய்வப் பாடலா கவோ, இன்ன பிறவாகவோ, எந்த உருவத்திலாயினும் பல் வேறு மக்களையும் தன்பால் காந்தம்போல் ஈர்த்துக் கொள் கிறது; இத்தகைய பேராற்றல் வேறு எந்தக் கலைக்கும் இந்த