பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 தமிழ் நூல் தொகுப்புக் கலை திணைக்கு உரிய நூறு பாடல்கள் முடிந்த பின்னரே, அடுத்த திணைக்கு உரிய பாடல்கள் தொடங்கும். (5) அந்த மூன்றனுள் நெடுந்தொகை என்னும் நூலில் பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வரிசை முறை ஒரு வகையில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது; குறுந் தொகையிலும் நற்றிணையிலும் எந்த வரிசை முறையும் இன்றி ஐந்து திணைகளும் கண்டபடி மாறிமாறிக் கலந்துள்ளன. ஆனால், ஐங்குறு நூற்றில், மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசைமுறை அமைந்துள்ளது. (6) அந்த நூல்களில், இன்னின்ன திணைக்கு இத்தனை யித்தனை பாடல்கள் என்ற வரையறையின்றி, திணைக்குத் திணை கண்டபடி ஏறவும் தாழவும் உள்ளன. ஐங்குறு நூற்றில் ஒவ்வொரு திணைக்கும் நூறு - நூறு பாடல்கள் சரியீட்டில் உள்னன. இவ்வாறாக, அகப்பொருள் பற்றிய ஆசிரியப் பாவாலான தொகை நூல்களுக் குள்ளேயே சில வேறுபாடுகளைக் காண முடிகிறது. இந்தவேறுபாடுகளைக் கொண்டும் இந்த வேறுபாடு களின் அடிப்படையில் எழுந்த ஐங்குறு நூறு என்னும் பெயர் அமைப்பைக் கொண்டும், அந்த மூன்று அகப்பொருள் தொகை நூல்களுக்குப் பின்னரே ஐங்குறு நூறு தொகுத்து வடிவமைக் கப்பட்டது என உய்த்துணரலாம். இதனை அறிவிக்கவே, இந்த வேறுபாடுகள் ஆராயப்பட்டன. ஆசிரியர்கள் இந்நூலின் மருதப் பகுதியைப்பாடிய புலவர் ஒரம் போகியார் நெய்தலைப் பாடியவர் அம் மூவனார், குறிஞ்சிப் பகுதியின் ஆசிரியர் கபிலர்; பாலை பாடியவர் ஒதலாந்தை யார் முல்லையின் ஆசிரியர் பேயனார். இதனை, 'மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன் கருதுங் குறிஞ்சி கபிலன்-கருதிய பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு.