பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/305

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஐங்குறுநூறு 281 றும், நற்றிணையில் பத்துமாக மொத்தம் இருபத்தேழு பாடல் கள் பாடியுள்ளார்; இவற்றுள் இருபத்து மூன்று பாடல்கள் நெய்தலாகும். குறிஞ்சி பாடிய கபிலர், நெடுந்தொகையில் பதினெட்டும் குறுந்தொகையில் இருபத்தொன்பதும், நற்றிணை யில் இருபதும், கலித் தொகையில் இருபத் தொன்பதுமாக மொத்தம் தொண்ணுற்றாறு பாடல்கள் பாடியுள்ளார்; இவற் றுள் தொண்ணுாறு பாடல்கள் குறிஞ்சியாகும்; இவையன்றி பத்துப் பாட்டுள் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டு' என்னும் நூலையும் கபிலர் பாடியுள்ளார். நான்காவதாகப் பாலை பற்றிப் பாடியுள்ள ஒதலாந்தையார், குறுந்தொகையில் மட்டும் மூன்று பாடல்கள் பாடியுள்ளார்; இம் மூன்றில் இரண்டு பாலையாகும். இறுதியாக முல்லைத் திணை பற்றிப் பாடியுள்ள பேயனார், நெடுந்தொகையில் ஒன்றும் குறுந்தொகையில் நான்குமாக மொத்தம் ஐந்து பாடியுள்ளார்; இவ்வைந்தனுள் மூன்று முல்லையாகும். இந்த அமைப்பினை நோக்குங்கால்,-ஐங்குறு நூற்றுப் புலவர் ஐவருள், அவரவரும் ஐங்குறுநூற்றில் பாடியுள்ள தத்தம் திணைப்பற்றிய பாடல்களையே பிற நூல்களிலும் மிகுதியாகப் பாடியுள்ளமை புலப்படும். இதனால், அவரவரும் அவ்வத் திணையில் வல்லுநர் என்பது உறுதியாகிறது. இவ்வா றாக, இவர்கள் குறிப்பிட்ட திணைபற்றிப் பாடியிருந்த பாடல் கள் பலவற்றிலிருந்து, சிறந்தனவாக நூறு-நூறு வீதம் தேர்ந் தெடுத்துக் கூடலூர் கிழார் ஐங்குறுநூற்றை உருவாக்கியுள்ளார். இந்த ஐவரைப் போலவே, இன்னும் பலர் குறிப்பிட்ட திணைகளில் வல்லுநரா யிருந்திருப்பர். சான்றாகக் கலித் தொகைப் புலவர்களை எடுத்துக் கொள்வோம். கலித் தொகையில், பாலைக்கலியைப் பாலை பாடிய பெருங்கடுங் கோவும், குறிஞ்சிக் கலியைக் கபிலரும், மருதக் கலியை மருதனிள நாகனாரும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத் திரனும், நெய்தல் கலியை நல்லந்துவனாரும் பாடியுள்ளனர். இவ்வைவருள் கபிலர் மட்டும் ஐங்குறு நூற்றிலும் இடம் பெற்றுள்ளார்; இவர் குறிஞ்சியற்றி நூற்றுக்கணக்கில் பாடியதே அதற்குக் காரணமாகும். பாலை பாடிய பெருங்